நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3571
Zoom In NormalZoom Out


ரூஉப்பணை யிமிழ
வதுவை மண்ணிய மகளிர் விதுப்புற்றுப்
பூக்கணு மிமையார் நோக்குபு மறைய
மென்பூ வாகைப் புன்புறக் கவட்டிலை
பழங்கன்று கறித்த பயம்பம லறுகைத்
தழங்குரல் வானின் தலைப்பெயற் கீன்ற
மண்ணு மணியன்ன மாயிதழ்ப் பாவைத்
தண்ணறு முகையொடு வெண்ணூல்சூட்டித்
தூவுடைப் பொலிந்து மேவரத் துவன்றி
மழைப்பட்டன்ன மணன்மலி பந்தர்
இழையணி சிறப்பிற் பெயர்வியர்ப் பாற்றித்
தமர்நமக் கீத்த தலைநாள் இரவின்
உவர்நீங்கு கற்பினெம் உயிருடம் படுவி
முருங்காக் கலிங்கம் முழுவதும் வளைஇப்
பெரும்புழுக் குற்றநின் பிறைநுதற் பொறிவியர்
உறுவளி யாற்றச் சிறுவரை திறவென
ஆர்வ நெஞ்சமொடு போர்வை வவ்வலின்
உறைகழி வாளின் உருவுபெயர்ந்த திமைப்ப
மறைதிறன் அறியா ளாகி ஒய்யென
நாணினள் இறைஞ்சி யோளே பேணிப்
பரூஉப்பகை யாம்பற் குரூஉத்தொடை நீவிச்
சுரும்பிமிர் ஆய்மலர் வேய்ந்த
இரும்பல் கூந்தல் இருண்மறை யொளித்தே”
   (அகம்.136)

என வரும்.                                              (4)

கற்பின்கண் தலைவன் கூற்றுக்கள் நிகழுமிட மிவையெனல்
 

146. கரணத்தி னமைந்து முடிந்த காலை
நெஞ்சுதளை யவிழ்ந்த புணர்ச்சிக் கண்ணும்
எஞ்சா மகிழ்ச்சி யிறந்துவரு பருவத்தும்
அஞ்ச வந்த உரிமைக் கண்ணும்
நன்னெறிப் படருந் தொன்னலப் பொருளினும்
பெற்ற தேஎத்துப் பெருமையி னிலைஇக்
குற்றஞ் சான்ற பொருளெடுத் துரைப்பினும்
நாமக் காலத் துண்டெனத் தோழி
யேமுறு கடவு ளேத்திய மருங்கினும்
அல்லல் தீர வார்வமோ டளைஇச்
சொல்லுறு பொருளின் கண்ணுஞ் சொல்லென
ஏனது சுவைப்பினும் நீகை தொட்டது
வானோ ரமுதம் புரையுமா லெமக்கென
அடிசிலும் பூவுந் தொடுதற் கண்ணும்
அந்தணர் திறத்துஞ் சான்றோர் தேஎத்தும்
அந்தமில் சிறப்பிற் பிறர்பிறர் திறத்தினும்
ஒழுக்கங் காட்டிய குறிப்பினும், ஒழுக்கத்துக்
களவினு ணிகழ்ந்த அருமையைப் புலம்பி
அலமர லுள்ளமொ டளவிய விடத்தும்
அந்தரத் தெழுகிய