ம் ஐயர்
யாத்த கரணமுமென்னும் இருவகைச்சடங்கானும்
ஒரு குறைபாடின்றாய் மூன்று இரவின்
முயக்கம் இன்றி ஆன்றோர்க்கு அமைந்த
வகையாற் பள்ளிசெய்து ஒழுகி நான்காம்
பகலெல்லை முடிந்தகாலத்து: ஆன்றோராவர்,
மதியுங் கந்தருவரும் அங்கியும். நெஞ்சுதளை
அவிழ்ந்த புணர்ச்சிக்கண்ணும் - களவிற் புணர்ச்சி போலக்
கற்பினும் மூன்று நாளுங் கூட்டமின்மையானும்
நிகழ்ந்த மனக்குறை தீரக்கூடிய கூட்டத்தின்
கண்ணும். அது
நாலாம் நாளை யிரவின்கண்ணதாம். உ-ம்: “விரிதிரைப் பெருங்கடல் வளைஇய வுலகமும் அரிதுபெறு சிறப்பிற் புத்தே ணாடும் இரண்டுந் தூக்கிற் சீர்சா லாவே பூப்போ லுண்கட் பொன்போன் மேனி மாண்வரி யல்குற் குறுமகள் தோண்மாறு படூஉம் வைகலொ டெமக்கே.”
(குறுந்.101) இது நெஞ்சு
தளையவிழ்ந்த புணர்ச்சி. “முகனிகுத் தொய்யென விறைஞ்சி யோளே.”
(அகம்.86) என முற்காட்டியது
கரணத்தின் அமைந்து முடிந்தது. எஞ்சா
மகிழ்ச்சி இறந்துவரு பருவத்தும் - அதன் பின்னர் ஒழியாத மகிழ்ச்சி பலவேறு வகையவாகிய நுகர்ச்சிக்கட் புதிதாக வந்த காலத்தினிடத்தும்; உ-ம்: “அறிதோ றறியாமை கண்டற்றாற் காமஞ் செறிதோறுஞ் சேயிழை மாட்டு.”
(குறள்.1110) என்றது பொருள்களை உண்மையாக
உணர்ந்த இன்பத்தை அறியுந்தோறும் அவற்றை முன்னர் இவ்வாறு விளங்க
உணராத அறிவின்மையை வேறுபடுத்துக்
கண்டாற்போலுஞ் சேயிழை மாட்டுச் செறியுந்தொறுந்
தலைத்தலை சிறப்பப்பெறுகின்ற காமத்தை
முன்னர் அறியப்பெற்றிலே மென்று வேறுபடுத்த
லென்றவாறு. அஞ்ச வந்த
உரிமைக்கண்ணும் - தலைவனும் பிறரும் அஞ்சும்படி தலைவிக்கட் டோன்றிய உரிமைகளிடத்தும்: அவை
இல்லறம் நிகழ்த்துமாறு தன் மனத்தாற்
பலவகையாகக் காணலும் பிறர்க்குத் தான் கொடுத்தலுங் கற்புச் சிறத்தலுமாம். உ-ம்: “உள்ளத் துணர்வுடையா னோதிய நூலற்றால் வள்ளன்மை பூண்டான்க ணொண்பொருள் - தெள்ளிய ஆண்மகன் கையில் அயில்வாள் அனைத்தரோ நாணுடையாள் பெற்ற நலம்.”
(நாலடி.39-6) இதனுள் நலமென்றது இம்மூன்றினையும்.
தலைவி இல்லறப் ப
|