நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3575
Zoom In NormalZoom Out


தோர்     கடவுள் உண்டு  எனக்கூறி  அதனைப்  பெரிதும் ஏத்திய
இடத்துத்  தலைவன்  வதுவைகாறும்  ஏதமின்றாகக்  காத்த தெய்வம்
இன்னும்காக்குமென்று ஏத்துதலும்;

அது,

“குனிகா யெருக்கின் குவிமுகிழ்...
தாமரை முகத்தியைத் தந்த பாலே.”

என்னுங்  குணநாற்பதில்  ஏமுறு  கடவுளைத் தலைவன்  தானே
ஏத்தியது போலாது,

“நேரிழாய் நீயும்நின் கேளும் புணர
வரையுறை தெய்வம் உவப்ப உவந்து
குரவை தழீஇயாம் ஆடக் குரவையுள்
கொண்டு நிலைபாடிக் காண்.”
                (கலி.39)

எனத்   தான்  பராய  தெய்வத்தினைத்  தோழி  கற்புக்காலத்துப்
பரவுக்கடன் கொடுத்தற்கு ஏத்தியவழித் தலைவனும் ஏத்துதலாம்.

உ-ம்:

“அதிரிசை அருவி பெருவரைத் தொடுத்த
பல்தேன் இறாஅல் அலகுநர்க் குதவும்
நுந்தைநல் நாட்டு வெந்திறன் முருகென
நின்னோய்க் கியற்றிய வெறிநின் தோழி
என்வயின் நோக்கலின் போலும் பன்னாள்
வருந்திய வருத்தந் தீரநின்
திருத்திழைப் பணைத்தோள் புணர்ந்துவந் ததுவே.”

தேன்   இறாலை அல்குநர்க்கு உதவும் நாடாதலின் நின்நோய்க்கு
இயற்றிய வெறி நுமர்க்குப் பயன்படாது எமக்குப் பயன்றருமென்றோன்
என்வயின்   நோக்கலின்   என்றது,   எனக்குப்   பயன்  கொடுக்க
வேண்டுமென்று  பராவுதலிற் றோளைப் புணர்ந்து உவந்தது என்றான்.
இது  கற்புக்காலத்துப்  பரவுக்கடன் கொடுக்கின்ற காலத்துத் தலைவன்
கூறியது.

அல்லல்     தீர  ஆர்வமொடு அளைஇச்  சொல்லுறு பொருளின்
கண்ணும்  - வரைந்த காலத்து மூன்றுநாட் கூட்டமின்மைக்குக் காரண
மென்னென்று  தலைவி மனத்து நிகழாநின்ற வருத்தந் தீரும்படி மிக்க
வேட்கையோடு    கூடியிருந்து   வேதஞ்சொல்லுதலுற்ற   பொருளின்
கண்ணும்: தலைவன் விரித்து விளங்கக் கூறும்.

அது     முதனாள்     தண்கதிர்ச்    செல்வற்கும்,   இடைநாள்
கந்தருவர்க்கும்,    பின்னாள்    அங்கியங்   கடவுட்கும்   அளித்து
நான்காநாள் அங்கியங் கடவுள் எனக்கு நின்னை அளிப்ப யான்  நுகர
வேண்டிற்று,   அங்ஙனம்   வேதங்  கூறுதலான்  எனத்  தலைவிக்கு
விளங்கக் கூறுதல். உதாரணம் இக்காலத்தின்று.

சொல்லென     ஏனது  சுவைப்பினும் நீ கைதொட்டது வானோர்
அமுதம்  புரையுமால் எமக்கென அடிசிலும் பூவுந் தொடுதற் கண்ணும்
-
அமுதிற்கு     மாறாகிய நஞ்சை  நுகரினும்  நீ கையான் தீண்டின
பொருள்  எமக்கு உறுதியைத்தருதலின் தேவர்