தோழிக்குக் கூறுவனவும் நெஞ்சிற்குக் கூறுவனவும் பிறவுங் கொள்க. “வேட்டச் செந்நாய் கிளைத்தூண் மிச்சில் குளவி மொய்த்த அழுகற் சின்னீர் வளையுடைக் கையள் எம்மொ டுணீஇய வருகதில் லம்ம தானே யளியளோ வளியளென் னெஞ்சமர்ந் தோளே.”
(நற்.56) இது தோழி கேட்பக்
கூறியது. “நாண்நகை யுடையம் நெஞ்சே கடுந்தெறல் வேனி னீடிய வானுயர் வழிநாள் வறுமை கூறிய மன்னீர்ச் சிறுகுளத் தொடுகுழி மருங்கிற் றுவ்வாக் கலங்கல் கன்றுடை மடப்பிடி கயந்தலை மண்ணிச் சேறுகொண் டாடிய வேறுபடு வயக்களிறு செங்கோல் வாலிணர் தயங்கத் தீண்டிச் சொறிபுற முரிஞிய நெறியயன் மராஅத் தல்குறு வரிநிழ லசைஇய நம்மொடு தான்வரு மென்ப தடமென் றோளி யுறுகணை மழவர் உருள்கீண் டிட்ட ஆறுசென் மாக்கள் சோறுபொதி வெண்குடைக் கல்மிசைக் கடுவளி யெடுத்தலில் துணைசெத்து வெருளேறு பயிரும் ஆங்கண் கருமுக முசுவின் கானத் தானே.”
(அகம்.121) இது நெஞ்சிற்குக்
கூறியது. வேற்று
நாட்டு அகல் வயின் விழுமத்தானும் - அங்ஙனம் வேற்று நாட்டிற் பிரியுங்காலத்துத் தானுறும் இடும்பையிடத்து:
தலைவற்குக் கூற்று நிகழும். விழுமமாவன: பிரியக் கருதியவன் பள்ளியிடத்துக் கனவிற் கூறுவனவும், போவேமோ தவிர்வேமோ என வருந்திக் கூறுவனவும், இவள் நலன் திரியுமென்றலும், பிரியுங்கொலென்று ஐயுற்ற தலைவியை ஐயந்தீரக் கூறலும், நெஞ்சிற்குச் சொல்லிச் செலவு அழுங்குதலும் பிறவுமாம். “நெஞ்ச
நடுக்குற” (கலி.24) என்னும் பாலைக்கலியுள்
கனவிற் கூறியவாறு காண்க. “உண்ணா மையி னுயங்கிய மருங்கின் ஆடாப் படிவத் தான்றோர் போல வரைசேர் சிறுநெறி நிரைபுடன் செல்லுங் கான யானை கவினழி குன்றம் இறந்து பொருள் தருதலும் ஆற்றாய் சிறந்த சில்லைங் கூந்தல் நல்லகம் பொருந்தி ஒழியின் வறுமை யஞ்சுதி யழிதக வுடைமதி வாழிய நெஞ்சே நிலவென நெய்கனி நெடுவேல் எஃ
|