நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3591
Zoom In NormalZoom Out


“திருந்துங் காட்சிப் பெரும்பெயர்க் கற்பின்
நாணுடை அரிவை மாண்நகர் நெடுந்தேர்
எய்த வந்தன்றாற் பாக நல்வரவு
இளையர் இசைத்தலின் கிளையோ ரெல்லாஞ்
சேயுயர் நெடுங்கடைத் துவன்றினர் எதிர்மார்
தாயரும் புதல்வருந் தம்முன் பறியாக்
கழிபே ருவகை வழிவழி சிறப்ப
அறம்புரி யொழுக்கங் காண்கம்
வருந்தின காண்கநின் திருந்துநடை மாவே.”

என வரும்.

ஏனை   வாயில் எதிரொடு தொகைஇ - சிறந்த மொழியை ஒழிந்து
நின்ற  வாயில்கட்கு  எதிரே  கூறுங்  கூற்றோடே முற் கூறியவற்றைத்
தொகுத்து:

உ-ம்:

“நகுகம் வாராய் பாண பகுவாய்
அரிபெய் கிண்கிணி ஆர்ப்பத் தெருவில்
தேர்நடை பயிற்றுந் தேமொழிப் புதல்வன்
பூநாறு செவ்வாய் சிதைத்த சாந்தமொடு
காமர் நெஞ்சந் துரப்ப யாம்தன்
முயங்கல் விருப்பொடு குறுகினே மாகப்
பிறைவனப் புற்ற மாசில் திருநுதல்
நாறிருங் கதுப்பினெங் காதலி வேறுணர்ந்து
வெரூஉம் மான்பிணையின் ஒரீஇ
யாரை யோவென் றிகழ்ந்துநின் றதுவே.”
       (நற்.250)

இஃது ஏனைவாயிலாகிய பாணற்கு உரைத்தது.

பண்ணமை  பகுதி முப்பதினொரு மூன்றும் - ஓதப்பட்ட இவையே
இடமாக  நல்லறிவுடையோர் ஆண்டாண்டு  வேறு வேறாகச் செய்யுள்
செய்து   கோடற்கு  அமைந்துநின்ற   கூறுபாட்டை   உடையவாகிய
முப்பத்துமூன்று கிளவியும்:

எண்ணருஞ் சிறப்பிற் கிழவோன் மேன -  களவுபோல இழிதொழி
லின்றி ஆராய்தற்கரிய சிறப்பொடு கூடிய தலைவன் கண்ண எ-று.

சிறப்பாவன,     வந்த  குற்றம்  வழிகெட  ஒழுகலும்,  இல்லறம்
நிகழ்த்தலும்,     பிரிவாற்றுதலும்,     பிறவுமாம்.    இன்னவிடத்தும்
இன்னவிடத்தும்  நிகழுங் கூற்றுக்களை வாயிலெதிர் கூறுங் கூற்றோடே
தொகுத்துப்  பண்ணுதற்கமைந்த  பகுதியுடையவாகிய  முப்பத்துமூன்று
கிளவியுந்  தலைவன்கண் நிகழ்வன என்று முடிக்க.  எடுத்துரைப்பினுந்
தந்நிலைகிளப்பினும் அக்கூற்றுக்களையும் வாயிலெதிரொடு  தொகைஇ