நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3594
Zoom In NormalZoom Out


கூறுகின்றது.

(இ-ள்) (அவன் அறிவு ஆற்ற அறியும் ஆகலின் ஏற்றற் கண்ணும்
நிறுத்தற்கண்ணும் உரிமை கொடுத்த கிழவோன் பாங்கிற் பெருமையின்
திரியா அன்பின்கண்ணும்) அவன் அறிவு ஆற்ற அறியும் ஆகலின் -
வேதத்தையுந்  தரும நூலையுந் தலைவன் அறிந்த அறிவைத் தலைவி
மிக  அறியுமாதலின்;  ஏற்றற்கண்ணும்  - அந்தணர் முதலிய மூவருந்
தத்தமக்குரிய  வேள்வி  செய்யுங்கால்  தம்  மனைவியர் பலருள்ளுந்
தமக்கு ஒத்தாளை வேள்விக்கண் உரிமை வகையான் ஏனை மகளிரின்
உயர்த்தல்  செய்யுமிடத்தும்; நிறுத்தற்கண்ணும்-தத்தங் குலத்திற்கேற்ப
நிறுத்துதலைச் செய்யுமிடத்தும்; உரிமை கொடுத்த கிழவோன் பாங்கின்
-  அவர்  குலத்  திற்கேற்ற உரிமைகளைக் கொடுத்த தலைவனிடத்து;
பெருமையில்  திரியா  அன்பின்கண்ணும்  -  தத்தங் குலத்திற்கேற்ற
பெருமையினின்றும்   நீங்காத   அன்பு  செய்து  ஒழுகுதற்கண்ணும்:
அறியுமாகலின் அன்புசெய்து ஒழுகுமெனக் கூட்டுக.

என்றது,  அந்தணர்க்கு நால்வரும் அரசர்க்கு மூவரும் வணிகர்க்கு
இருவருந் தலைவியராகியவழித் தங்குலத்திற் கொண்டவரே வேள்விக்கு
உரியர்;  ஏனையோர் வேள்விக்கு உரியரல்ல ரென்பதூஉம் அவர்க்குத்
தங்குலங்கட்கு    ஏற்றவகையின்    உரிமை   கொடுப்பரென்பதூஉம்
அவர்களும்     இது     கருமமே     செய்தானென்று    அன்பில்
திரியாரென்பதூஉங் கூறியவாறு.

உ-ம்:

“நின்ற சொல்லர் நீடு தோன் றினியர்
என்றும் என்றோள் பிரிபறி யலரே
தாமரைத் தண்டா தூதி மீமிசைச்
சாந்திற் றொடுத்த தீந்தேன் போலப்
புரைய மன்ற புரையோர் கேண்மை
நீரின் றமையா வுலகம் போலத்
தம்மின் றமையா நந்நயந் தருளி
நறுநுதல் பசத்தல் அஞ்சிச்
சிறுமை யுறுபவோ செய்பறி யலரே.”
             (நற்.1)

இதனுள்,     தாமரைத்தாதையும்  ஊதிச்  சந்தனத்தாதையும் ஊதி
வைத்த   தேன்போலப்  புரைய  என்றதனான்  ஏற்றற்கண்  தலைவி
கூறினாள்.    பிரிவறியலரென்றதும்   அன்னதொரு   குணக்குறையில
ரென்பதாம். பிரிவுணர்ந்து புலந்துரைப்பின் நாணழிவாம்.

“நிலத்தினும் பெரிதே வானினு முயர்ந்தன்று
நீரினு மாரள வின்றே சாரற்
கருங்கோல் குறிஞ்சிப்பூக் கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாட