னொடு நட்பே.”
(குறுந்.3) இது, நிறுத்தற்கட்
கூறியது. கிழவனை மகடூஉப் புலம்பு பெரிதாகலின் அலமரல் பெருகிய காமத்து மிகுதியும் - அறமும் பொருளுஞ் செய்வதனாற் புறத்துறைதலில் தலைவனைத் தலைவி நீங்குங்காலம் பெரிதாகலின் அதற்குச் சுழற்சிமிக்க வேட்கைமிகுதி நிகழ்ந்தவிடத்தும்: உ-ம்: “காமந் தாங்குமதி யென்போர் தாமஃ தறியலர் கொல்லோ அனைமது கையர்கொல் யாமெங் காதலர்க் காணே மாயிற் செறிதுனி பெருகிய நெஞ்சமொடு பெருநீர்க் கல்பொரு சிறுநுரை போல மெல்ல மெல்ல இல்லா குதுமே.”
(குறுந்.290) இது, தெருட்டுந் தோழிக்குத் தலைவி
காமத்து மிகுதிக்கட் கூறியது. இன்பமும்
இடும்பையும் ஆகிய இடத்தும் - அங்ஙனம் அலமரல் பெருகியவழித் தலைவனை எதிர்ப்பட்ட ஞான்று இன்பமுந், தனிப்பட்ட ஞான்று துன்பமும் உளவாகிய இடத்தும்: உ-ம்: “வாரல் மென்தினைப் புலவுக்குரல் மாந்திச் சாரல் வரைய கிளையுடன் குழீஇ வளியெறி வயிரிற் கிளிவிளி பயிற்றும் நளியிருஞ் சிலம்பின் நன்மலை நாடன் புணரிற் புணருமார் எழிலே பிரியின் மணிமிடை பொன்னின் மாமை சாயவென் அணிநலஞ் சிதைக்குமார் பசலை யதனால் அசுணங் கொல்பவர் கைபோல் நன்றும் இன்பமுந் துன்பமும் உடைத்தே தண்கமழ் நறுந்தார் விறலோன் மார்பே.”
(நற்.304) “இன்க ணுடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும் புன்க ணுடைத்தாற் புணர்வு”
(குறள்.1152) என வரும். கயந்தலை
தோன்றிய காமர் நெய்யணி நயந்த கிழவனை
நெஞ்சு புண்ணுறீஇ நளியின் நீக்கிய இளிவரு நிலையும் - யானைக் கன்று போலும் புதல்வன் பிறத்தலான் உளதாகிய விருப்பத்தை யுடைய நெய்யணிக்கு விரும்பிய தலைவனை நெஞ்சை
வருத்தித் தன்னைச் செறிதலினின்று நீக்கிய இளிவந்த நிலைமைக்கண்ணும்: தன்னை
அவமதித்தானென்றற்கு இளிவரு நிலையென்றார். “கரும்புநடு பாத்தியிற் கலித்த ஆம்பல் சுரும்புபசி களையும் பெரும்புனல் ஊர புதல்வனை யீன்றஎம் முயங்கல் அதுவே தெய்யநின் மார்புசிதைப் பதுவே.”
(ஐங்குறு.65) இது, புதல்வற்
பயந்தகாலத்துப் பிரிவுபற்றிக் கூறியது. புகன்ற உள்ளமொடு புதுவோர் சாயற்கு அகன்ற கிழவனை - புதல்வனை விளையாட்டை விரும்பின உள்ளத்தோடே புதுவது புணர்ந்த பரத்தையர் தன்மாட்டு மனநெகிழ்ந்த
மென்
|