மையின் பொருட்டு அவர்க்கு
அருள்செய்யப் பிரிந்து வந்தோனை; புலம்பு நனி காட்டி - தனது தனிமையை மிகவும் அறிவித்து; இயன்ற நெஞ்சந் தலைப் பெயர்த்து அருக்கி - அவன் மேற்சென்ற நெஞ்சினைச் செல்லாமல் அவனிடத்தினின்றும் மீட்டு
அருகப்பண்ணி; எதிர்பெய்து மறுத்த ஈரத்து மருங்கினும் - பிறருள் ஒருத்தியைக் காணாளாயினுங் கண்டாள்போலத் தன்முன்னர்ப் பெய்துகொண்டு வாயில்
மறுத்ததனான் தோற்றிய நயனுடைமைக்கண்ணும்: எனவே,
மறுப்பாள்போல் நயந்தாளாயிற்று.
கிழவனை மறுத்த வெனக் கூட்டுக. உ-ம்: “கடல்கண் டன்ன கண்ணகன் பரப்பில் நிலம்பக வீழ்ந்த வேர்முதிர் கிழங்கின் கழைகண் டன்ன தூம்புடைத் திரள்கால் களிற்றுச் செவியன்ன பாசடை மருங்கின் கழுநிவந் தன்ன கொழுமுகை இடையிடை முறுவன் முகத்திற் பன்மலர் தயங்கப் பூத்த பொய்கைப் புள்ளமிழ் பழனத்து வேப்புநனை அன்ன நெடுங்க ணீர்ஞெண் டிரைதேர் வெண்குரு கஞ்சி யயல தொலித்த பகன்றை யிருஞ்சேற் றள்ளல் திதலையின் வரிப்ப வோடி விரைந்துதன் ஈர்மலி மண்ணளைச் செறியும் ஊர மனைநகு வயலை மரனிவர் கொழுங்கொடி அரிமலர் ஆம்பலோ டார்தழை தைஇ விழவாடு மகளிரொடு தழூஉவணிப் பொலிந்து மலரேர் உண்கண் மாணிழை முன்கைக் குறுந்தொடி தொடக்கிய நெடுந்தொடர் விடுத்தது உடன்றனள் போலுநின் காதலி யெம்போல் புல்லுளைக் குடுமிப் புதல்வற் பயந்து நெல்லுடை நெடுநகர் நின்னின்று உறைய என்ன கடத்தளோ மற்றே தன்முகத் தெழுதெழில் சிதைய அழுதனள் ஏங்கி அடித்தென உருத்த தித்திப் பல்லூழ் நொடித்தெனச் சிவந்த மெல்விரல் திருகுபு கூர்நுதி மழுங்கிய எயிற்றள் ஊர்முழுது நுவலும்நிற் காணிய சென்மே.”
(அகம்.176) என வரும். எதிர்பெய்து மறுத்த ஈரமெனவே
எதிர்பெய்யாது மறுத்த ஈரமுங் கொள்க. “கூன்முள் முள்ளிக் குவிகுலைக் கழன்ற மீன்
|