முள் அன்ன வெண்கால் மாமலர் பொய்தன் மகளிர் விழவணிக் கூட்டும் அவ்வயல் நண்ணிய வளங்கேழ் ஊரனைப் புலத்தல் கூடுமோ தோழி யல்கல் பெருங்கதவு பொருத யானை மருப்பின் இரும்புசெய் தொடியி னேர வாகி மாக்க ணடைய மார்பகம் பொருந்தி முயங்கல் விடாஅல் இவையென மயங்கி யானோம் என்னவும் ஒல்லார் தாமற்று இவைபா ராட்டிய பருவமு முளவே யினியே, புதல்வன் தடுத்த பாலொடு தடைஇத் திதிலை அணிந்த தேங்கொள் மென்முலை நறுஞ்சாந் தணிந்த கேழ்கிளர் அகலம் வீங்க முயங்கல் யாம்வேண் டினமே தீம்பால் படுதல் தாமஞ் சினரே ஆயிடைக், ‘கவவுக்கை ஞெகிழ்ந்தமை போற்றி மதவுநடைச் செவிலி கையென் புதல்வனை நோக்கி நல்லோர்க் கொத்தனிர் நீயி ரிஃதோ செல்வற் கொத்தனெம் யாமென மெல்லவென் மகன்வயிற் பெயர்தந் தேனே யதுகண்டு யாமுங் காதலெம் அவற்கெனச் சாஅய்ச் சிறுபுறங் கவையினன் ஆகஉறுபெயல் தண்டுளிக் கேற்ற பழவுழு செஞ்செய் மண்போன் ஞெகிழ்ந்தவற் கலுழ்ந்தே நெஞ்சறை போகிய அறிவி னேற்கே.’”
(அகம்.26) இதனுள்
ஒருத்தியை வரைந்து கூறாது நல்லோரைப்
பொதுவாகக் கூறியவாறும் வேண்டினமெனப்
புலம்புகாட்டிக் கலுழ்ந்ததென ஈரங்கூறியவாறுங்
காண்க. தங்கிய ஒழுக்கத்துக்
கிழவனை வணங்கி எங்கையர்க்கு உரையென இரத்தற்கண்ணும் - பரத்தையர்மாட்டுத் தங்கிய
செவ்வியை மறையாத ஒழுக்கத்தோடே வந்த தலைவனை நீ கூறுகின்ற பணிந்த மொழிகளை எங்கையர்க்கு வணங்கிக் கூறென இரந்து கோடற்கண்ணும்: உ-ம்: “அகன்றுறை யணிபெற” என்னும் மருதக்கலி (73) யுள் “நோதக்காய் எனநின்னை நொந்தீவார் இல்வழித் தீதிலேன் யானெனத் தேற்றிய வருதிமன் ஞெகிழ்தொடி இளையவர் இடைமுலைத் தாதுசோர்ந் திதழ்வனப் பிழந்தநின் கண்ணிவந் துரையாக்கால்” என்பனகூறி, “மண்டுநீ ராரா மலிகடல் போ
|