அயலிதழ் புரையும் மாசில் அங்கை மணிமருள் அவ்வாய் நாவொடு நவிலா நகைபடு தீஞ்சொல் யாவரும் விழையும் பொலந்தொடிப் புதல்வனைத் தேர்வழங்கு தெருவில் தமியோற் கண்டே கூரெயிற்று அரிவை குறுகினள் யாவருங் காணுநர் இன்மையின் செத்தனள் பேணிப் பொலங்கலஞ் சுமந்த பூண்டாங்கு இளமுலை வருக மாளஎன் உயிரெனப் பெரிதுவந்து கொண்டனள் நின்றோட் கண்டுநிலைஇச் செல்லேன் மாசில் குறுமகள் எவன்பே துற்றனை நீயுந் தாயை யிவற்கென யான்தற் கரைய வந்து விரைவனென் கவைஇக் களவுடம் படுநரின் கவிழ்ந்து நிலங் கிளையா நாணி நின்றோள் நிலைகண்டு யானும் பேணினேன் அல்லெனோ மகிழ்ந வானத்து அணங்கருங் கடவுள் அன் னோள்நின் மகன்தாய் ஆதல் புரைவதாங் கெனவே.”
(அகம்.16) என வரும். (சிறந்த
செய்கை அவ்வழித் தோன்றி அறம்புரி
உள்ளமொடு தன்வரவு அறியாமைப்
புறஞ்செய்து பெயர்த்தல்
வேண்டு இடத்தானும்) சிறந்த செய்கை
அவ்வழித்தோன்றி - காமக்கிழத்தியது ஏமுறும் விளையாட்டுப் போலாது தலைவி தன் புதல்வனைத் தழீஇ விளையாட்டையுடைய இல்லிடத்தே தலைவன் தோன்றி; அறம்புரி உள்ளமொடு தன்வரவு அறியாமைப் புறஞ்செய்து - அவ் விளையாட்டு மகிழ்ச்சியாகிய மனையறத்தினைக் காண விரும்பிய
நெஞ்சோடே தன் வரவினைத் தலைவி அறியாமல் அவள் பின்னே நிற்றலைச்செய்து; பெயர்தல் வேண்டு இடத்தானும் - தலைவியது துனியைப் போக்குதல் வேண்டிய இடத்தும்: ‘தன்வரவறியாமை’
என்றதற்குத் தன்னைக் கண்டால் தலைவியுழை நின்றார்
தனக்குச் செய்யும் ஆசாரங்களையும்
அவர் செய்யாமற் கைகவித்துத் தன் வரவு அறியாமை நிற்பனென்று கொள்க. உ-ம்: “மையற விளங்கிய மணிமருள் அவ்வாய்தன் மெய்பெறா மழலையின் விளங்குபூண் நனைத்தரப் பொலம்பிறை யுட்டாழ்ந்த புனைவினை உருள்கலன் நலம்பெறு கமழ்சென்னி நகையொடு துயல்வர வுருவெஞ்சா திடைகாட்டும் உடைகழல் அந்துகில் அரிபொலி கிண்கிணி ஆர்ப்போவா தடிதட்பப் பாலோடு அலர்ந்த முலைமறந்து முற்றத்துக் கால்வல்தேர் கையின் இயக்கி நடைபயிற்றா ஆலமர் செல்வன் அணிசால் பெருவிற
|