னைப் பாட்டுக்
(கலி.97) ‘காவற் பாங்கின் பக்க’ முமாம். (கொடுமை ஒழுக்கங் கோடல் வேண்டி அடிமேல் வீழ்ந்த கிழவனை நெருங்கிக் காதல் எங்கையர் காணின் நன்றென மாதர் சான்ற வகையின்கண்ணும்) கொடுமை ஒழுக்கங் கோடல் வேண்டி - அங்ஙனம் பகுதியினீங்கிப் பரத்தையர்மாட்டு ஒழுகிக்
கொடுமை செய்த ஒழுக்கத்தைத் தலைவி பொறுத்தலை வேண்டி;
அடிமேல் வீழ்ந்த கிழவனை நெருங்கி - தன் அடிமேல் வீழ்ந்து
வணங்கிய தலைவனை அதனின்மீது துனிமிக்குக்
கழறி; காதல் எங்கையர் காணின் நன்றென - நின்மாட்டுக் காதலையுடைய
எங்கையர் காணின் இவை நன்றெனக் கொள்வரெனக் கூறி; மாதர்
சான்ற வகையின் கண்ணும் - காதல் அமைந்து மாறிய
வேறுபாட்டின் கண்ணும்: பொறாதாரைக்
கொள்ளா ரென்பவாகலிற் கோடல் பொறுத்தலாயிற்று, ‘காதலெங்கையர் மாதர் சான்ற’ என்பனவற்றான் துனிகூறினார், எனவே, யாங்கண்டதனாற் பயனின் றென்றார். உ-ம்: “நில்லாங்கு நில்” என்னும் பூழ்ப்பாட்டினுள், “மெய்யைப்பொய் யென்று மயங்கிய கையொன் றறிகல்லாய் போறிகாணீ; நல்லாய், பொய்யெல்லாந் ஏற்றித் தவறு தலைப்பெய்து கையொடு கண்டாய் பிழைத்தேன் அருளினி, அருளுகம் யாம்யாரேம் எல்லா தெருள அளித்துநீ
பண்ணிய பூழெல்லாம் இன்னும் விளித்துநின்
பாணனோ டாடி அளித்தி விடலைநீ நீத்தலின் நோய்பெரி
தேய்க்கும் நடலைப்பட் டெல்லாநின் பூழ்.”
(கலி.95) இதனுள் ‘அருளினி’யென அடிமேல் வீழ்ந்தவாறும்
‘அருளுகம் யாம்யார்’ எனக் காதல் அமைந்தவாறும் ‘விளித்தளித்தி’ யென இப்பணிவை நின் பெண்டிர் கொள்வரெனவுங் கூறியவாறுங் காண்க. “நினக்கே அன்றஃ தெமக்குமார் இனிதே நின்மார்பு நயந்த நன்னுதல் அரிவை வேண்டிய குறிப்பினை யாகி ஈண்டுநீ அருளா தாண்டுறை தல்லே.”
(ஐங்குறு.46) இதுவும் அது. தாயர்
கண்ணிய நல்லணிப் புதல்வனை மாயப் பரத்தை உள்ளிய வழியும் - பரத்தையர் கருதி அணிந்த நன்றாகிய அணிகளை யுடைய புதல்வனை மாயப் பரத்தைமையைக் குறித்தவிடத்தும்: அவருள் துனியாலே வருந்திய பரத்தையர் தம் வருத்தத்தினை உணர்த்தியும் தலைநின்றொழுகும் பரத்தையர் தஞ்சிறப்பு உணர்த்தியும் அணிவரென்றற்குக் ‘கண்ணிய’ என்றார். பரத்தையர் சேரி சென்று
அணிய
|