டும் நீங்கிய ஏதி லாள ரிவண்வரிற் போதிற் பொம்ம லோதியும் புனையல் எம்முந் தொடாஅ தென்குவ மன்னே.” (குறுந்.191) இது, காய்ந்து
கூறியது. “முதைப்புனங் கொன்ற ஆர்கலி யுழவர் விதைக்குறு வட்டி போதொடு பொதுளப் பொழுதோ தான்வந் தன்றே மெழுகான் றூதுலைப் பெய்த பகுவாய்த் தெண்மணி மரம்பயி லிறும்பி னார்ப்பச் சுரனிழிபு மாலை நனிவிருந் தயர்மார் தேர்வரு மென்னு முரைவா ராதே.”
(குறுந்.155) இது, பொழுதொடு தான் வந்தன்றெனப் பொழுதுகண்டு அழிந்து கூறினாள். “அம்ம வாழி தோழி சிறியிலை நெல்லி நீடிய கல்காய் கடத்திடைப் பேதை நெஞ்சம் பின்படச் சென்றோர் கல்லினும் வலியர் மன்ற பல்லித ழுண்க ணழப்பிரிந் தோரே.”
(ஐங்குறு.334) இது, வன்புறை எதிரழிந்து
கூறியது.
“அம்ம வாழி தோழி யாவதும் வல்லா கொல்லோ தாமே யவண கல்லுடை நன்னாட்டுப் புள்ளினப் பெருந்தோடு யாஅந் துணைபுணர்ந் துறைதும் யாங்குப் பிரிந்துறைதி யென்னா தவ்வே.”
(ஐங்குறு.333) இது, புள்ளை நொந்து
கூறியது. “காதல ருழைய ராகப் பெரிதுவந்து சாறுகொ ளூரிற் புகல்வேன் மன்ற அத்த நண்ணிய அங்குடிச் சீறூர் மக்கள் போகிய அணிலாடு முன்றிற் புலப்பில் போலப் புல்லென் றலப்பென் தோழியவர் அகன்ற ஞான்றே.”
(குறுந்.41) இஃது, ஆற்றுவலெனக்
கூறியது. “நீகண் டனையோ கண்டார்க்கேட் டனையோ ஒன்று தெளிய நசையின மொழிமோ வெண்கோட் டியானை சோணை படியும் பொன்மலி பாடலி பெறீஇயர் யார்வாய்க் கேட்டனை காதலர் வரவே.”
(குறுந்.75) இது, தலைவன் வரவை விரும்பிக்
கூறியது. “இம்மையாற் செய்ததை யிம்மையே யாம்போலும் உம்மையா மென்பவ ரோரார்காண் - நம்மை எளிய ரென நினைந்த வின்குழலா ரேடி தெளியச் சுடப்பட்ட வாறு.”
(திணை.நூற்.123) இது, குழல் கேட்டுத் தோழிக்குக்
கூறியது. “பெருங்கடல் திரையது சிறுவெண் காக்கை நீத்துநீ ரிருங்கழி யிரைதேர்
|