கன்
பிரிந்தென இறைகே ழெல்வளை நீங்கிய நிலையே.”
(ஐங்குறு.140) இது, பரத்தையிற் பிரிந்துழி இவன் நின் வார்த்தையே கேட்ப னென்பது தோன்றப் பாணற்குத் தலைவி கூறியது. “ஆடியல் விழவி னழுங்கன் மூதிர் உடையோர் பான்மையிற் பெருங்கை தூவா அறனில் புலத்தி யெல்லித் தோய்த்த புகாப்புகர் கொண்ட புன்பூங் கலிங்கமொடு வாடா மாலை துயல்வர வோடிப் பெருங்கயிறு நாலு மிரும்பனம் பிணையற் பூங்க ணாயம் ஊக்க வூங்காள் அழுதனள் பெயரு மஞ்சி லோதி நல்கூர் பெண்டின் சில்வளைக் குறுமகள் ஊச லுறுதொழிற் பூசற் கூட்டா நயனின் மாக்களொடு குழீஇப் பயனின் றம்மவிவ் வேந்துடை யவையே.”
(நற்.90) இது பாணனைக் குறித்துக்
கூறியது. “நெய்யுங் குய்யு மாடி மெய்யொடு மாசுபட் டன்றே கலிங்கமுந் தோளுந் திதலை மென்முலைத் தீம்பால் பிலிற்றப் புதல்வற் புல்லிப் புனிறுநா றும்மே வாலிழை மகளிர் சேரித் தோன்றுந் தேரோற் கொத்தனெ மல்லே மதனாற் பொன்புரை நரம்பி னின்குரற் சீறியாழ் எழாஅல் வல்லை யாயினுந் தொழாஅல் கொண்டுசெல் பாணநின் தண்டுறை யூரனைப் பாடுமனைப் பாடல் கூடாது நீடுநிலைப் புரவியும் பூணிலை முனிகுவ விரகில மொழியல்யாம் வேட்டதில் வழியே.”
(நற்.380) இது பாணனுக்கு வாயின்
மறுத்தது. “புல்லேன் மகிழ்ந புலத்தலு மிலனே கல்லா யானைக் கடுந்தேர்ச் செழியன் படைமாண் பெருங்குள மடைநீர் விட்டெனக் காலணைந் தெதிரிய கணைக்கோட்டு வாளை யள்ளலங் கழனி யுள்வா யோடிப் பகடுசே றுதைத்த புள்ளிவெண் புறத்துச் செஞ்சா லுழவர் கோற்புடை மதரிப் பைங்காற் செறுவி னணைமுதற் புரளும் வாணன் சிறுகுடி யன்னவென் கோனே ரெல்வளை ஞெகிழ்த்த நும்மே.”
(நற்.340) இது, ஆற்றாமை வாயிலாகச் சென்றுழித் தலைவி
கூறியது. “வெள்ளாங் குருகின் பிள்ளை செத்தெனக் காணிய சென்ற மடநடை நாரை காலை யிருந்து மாலைச் சேக்குந் தண்கடற் சேர்ப்பனொடு வாரான் தான்வந் தனனெங் காத லோனே.”
(ஐங்குறு.157) இது, வாயில்
|