வேண்டி ஒழுகுகின்றான் புதல்வன் வாயிலாக வருமெனக் கேட்டு அஞ்சிய தலைவி அவன் விளையாடித் தனித்து வந்துழிக் கூறியது. “கூன்முண்
முள்ளி” என்னும் (26) அகப்பாட்டு ஆற்றாமை
வாயிலாகச் சென்றுழித் தடையின்றிக் கூறியவாறு. ‘மாறாப் புண்போன் மாற்றச் சீற்றங் கனற்றப்’ பின்னும்
புலவி கூர்ந்து தலைவன் கேட்ப முன்னிலைப் புறமொழியாக யான் நோமென்னவும் ஒல்லாரென வலிதிற் கூறியவாறு காண்க. “பூங்கட் புதல்வனைப் பொய்பல பாராட்டி”
(கலி.79) எனப் புதல்வனை வாயிலாகக் கொண்டு சென்றவாறு
காண்க. “நாடிநின் றூதாடித் துறைச்செல்லா ளூரவர் ஆடைகொண் டொலிக்குநின் புலத்திகாட் டென்றாளோ கூடியார் புனலாடப் புணையாய மார்பினில் ஊடியா ரெறிதர வொளிவிட்ட வரக்கினை.”
(கலி.72) இஃது, ஆடை கழுவுவாளை
வாயிலென்றது. பிறவும் வேறுபட வருவனவெல்லாம்
இதனாற் கொள்க. கிழவோள்
செப்பல் கிழவது என்ப -
இப்பத் தொன்பதுங் கிழவோனுக்கு உரிமையுடைத்தென்று
கூறுவர் ஆசிரியர், என்றவாறு. முன்னர் நின்ற ஏழனுருபுகளைத் தொகுத்து இன்னதன் கண்ணும் இன்னதன்கண்ணுந் தலைவி செப்புதலை வாயிலின் வகையோடே கூட்டிக் கிழவோள் செப்பல் வாயிலின் வரூஉம் வகையொடு தொகைஇ என
மாறுக.
(6) தலைவி கூற்றின்கட்படுவதோரிலக்கணமுணர்த்தல்
|