நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3616
Zoom In NormalZoom Out


எ-று.

“அறனின்றி    யயல்தூற்றும்” (கலி.3) என்னும் பாலைக் கலியுள்
இறைச்சியும்    வினையுமாகிய    பூ    முதலியன    கூறியவாற்றான்
தலைவிக்கிரங்கி   நீர்   செலவழுங்குமெனக்  கூறுவாள்  “யாமிரப்பவு
மெமகொள்ளா   யாயினை”    எனப்   பிற  வாயில்களையுங்  கூட்டி
உரைத்தவாறு காண்க.                                      (8)

கற்பின்கண் தோழிக்குரிய கூற்றுக்கள் நிகழுமிடமிவையெனல்
 

150. பெறற்கரும் பெரும்பொருள் முடிந்தபின் வந்த
தெறற்கரு மரபிற் சிறப்பின் கண்ணும்
அற்றமழி வுரைப்பினும் அற்ற மில்லாக்
கிழவோட் சுட்டிய தெய்வக் கடத்தினுஞ்
சீருடைப் பெரும்பொருள் வைத்தவழி மறப்பினும்
அடங்கா வொழுக்கத் தவன்வயி னழிந்தோளை
அடங்கக் காட்டுதற் பொருளின் கண்ணும்
பிழைத்துவந் திருந்த கிழவனை நெருங்கி
இழைத்தாங் காக்கிக் கொடுத்தற் கண்ணும்
வணங்கியன் மொழியான் வணங்கற் கண்ணும்
புறம்படு விளையாட்டுப் புல்லிய புகற்சியுஞ்
சிறந்த புதல்வனை நேராது புலம்பினும்
மாணலந் தாவென வகுத்தற் கண்ணும்
பேணா வொழுக்க நாணிய பொருளினுஞ்
சூள்நயத் திறத்தாற் சோர்வுகண் டழியினும்
பெரியோ ரொழுக்கம பெரிதெனக் கிளந்து
பெறுதகை யில்லாப் பிழைப்பினு மவ்வயின்
உறுதகை யில்லாப் புலவியுள் மூழ்கிய
கிழவோள்பா னின்று கெடுத்தற் கண்ணும்
உணர்ப்புவயின் வாரா வூடலுற் றோள்வயின்
புணர்த்தல் வேண்டிய கிழவோன்பா னின்று
தான்வெகுண் டாக்கிய தகுதிக் கண்ணும்
அருமைக் காலத்துப் பெருமை காட்டிய
எண்மைக் காலத் திரக்கத் தானும்
பாணர் கூத்தர் விறலிய ரென்றிவர்
பேணிச் சொல்லிய குறைவினை யெதிரும்
                                தொல்.பொருள்.நச். 

நீத்த கிழவனை நிகழுமாறு படீஇக்
காத்த தன்மையிற் கண்ணின்று பெயர்ப்பினும்
பிரியுங் காலை யெதிர் நின்று சாற்றிய
மரபுடை யெதிரு முளப்படப் பிறவும்
வகைபட வந்த கிளவி யெல்லாந்
தோழிக் குரிய வென்மனார் புலவர்.

இது, முறையானே. தோழிக்குரிய கூற்றுக் கூறுகின்றது.

(இ-ள்.) (பெறற்கு அரும் பெரும் பொருள் மு