நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3617
Zoom In NormalZoom Out


டிந்தபின்     வந்த   தெறற்கு  அரும்   மரபிற்  சிறப்பின்கண்ணும்)
பெறற்கு  அரும்  பெரும்  பொருள்  முடிந்தபின் வந்த - தலைவனுந்
தலைவியுந் தோழியும் பெறுதற்கரிதென நினைத்த பெரிய பொருளாகிய
வதுவை   வேள்விச்  சடங்கான்  முடிந்தபின்பு  தோன்றிய;  தெறற்கு
அரும்   மரபிற்   சிறப்பின்   கண்ணும்   -   தனது  தெறுதற்கரிய
மரபுகாரணத்தான்  தலைவன்  தன்னைச்  சிறப்பித்துக் கூறுமிடத்தும்;
தோழி கூற்று நிகழும்.

தலைவியையுந்     தலைவனையும் வழிபாடாற்றுதலின்  ‘தெறற்கரு
மரபின்’ என்றார். தெறுதல் - அழன்று நோக்குதல். சிறப்பு, இவளை நீ
ஆற்றுவித்தலின்  எம் உயிர் தாங்கினேம் என்றாற் போல்வன. அவை
எம்பெருமானே  அரிதாற்றிய  தல்லது யான் ஆற்றுவித்தது உண்டோ
வென்றானும்   நின்   அருளான்   இவள்  ஆற்றிய  தல்லது  யான்
ஆற்றுவித்தது உண்டோவென்றானுங் கூறுவனவாம்.

“அயிரை பரந்த அந்தண் பழனத்
தேந்தெழின் மலரத் தூம்புடைத் திரடாள்
ஆம்பல் குறுநர் நீர்வேட் டாங்கிவள்
இடைமுலைக் கிடந்து நடுங்க லானீர்
தொழுதுகாண் பிறையின் தோன்றி யாம்நுமக்
கரியே மாகிய காலைப்
பெரிய நோன்றனிர் நோகோ யானே.”
        (குறுந்.178)

இதனுண்     முலையிடைக் கிடந்தும் பனிக்கின்ற நீர் அரியமாகிய
காலத்து  எங்ஙனம்  ஆற்றினீரென யான் நோவாநின்றேன். 
இங்ஙனம்
அருமை    செய்தலான்   தேற்றுதற்கு   உரியோனாகிய   என்னைச்
சிறப்பித்துக் கூறல் ஆகாது என்றவாறு காண்க.

“பொங்குதிரை பொருத வார்மண லடைகரைப்
புன்கா னாவற் பொதிப்புற விருங்கனி
கிளைசெத்து மொய்த்த தும்பி பழஞ்செத்துப்
பல்கா லலவன் கொண்டகோட் கூர்ந்து
கொள்ளா நரம்பி னிமிரும் பூசல்
இரைதேர் நாரை யெய்திய விடுக்குந்
துறைகெழு மாந்தை யன்ன விவள்நலம்
பண்டு மிற்றே கண்டிசிற் றெய்ய
உழையிற் போகா தளிப்பினுஞ் சிறிய
ஞெகிழ்ந்த கவினலங் கொல்லோ மகிழ்ந்தோர்
கட்கழி செருக்கத் தன்ன
காமங் கொல்லிவள் கண்பசந் ததுவே.”         
(நற்.35)

இதனுள் தலைவி கனியாகவுந் தும்பி தோழியாகவும் அலவன்