நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3620
Zoom In NormalZoom Out


னியான் விடுக்குவென் அல்லேன் மந்தி
பனிவார் கண்ணள் பலபுலந் துறையக்
கடுந்திறல் அத்தி ஆடணி நசைஇ
நெடுநீர்க் காவிரி கொண்டொளித் தாங்குநின்
மனையோள் வௌவலும் அஞ்சுவல் சினைஇ
ஆரியர் அலறத் தாக்கிப் பேரிசைத்
தொன்றுமுதிர் வடவரை வணங்குவிற் பொறித்து
வெஞ்சின வேந்தரைப் பிணித்தோன்
வஞ்சி அன்னவென் நலந்தந்து சென்மே.”   
(அகம்.396)

இது காமக்கிழத்தி என்னலந் தாவென்றது.

“உள்ளுதொறு நகுவேன் தோழி வள்ளுகிர்
மாரிக் கொக்கின் கூரல கன்ன
குண்டுநீ ராம்பல் தண்டுறை யூரன்
தேங்கம ழைம்பால் பற்றி யென்வயின்
வான்கோல் எல்வளை வௌவிய பூசல்
சினவிய முகத்துச் சினவாது சென்றுநின்
மனையோட் குரைப்பல் என்றலின் முனையூர்ப்
பல்லா நெடுநிரை வில்லின் ஒய்யுந்
தேர்வண் மலையன் முந்தைப் பேரிசைப்
புலம்பிரி வயிரியர் நலம்புரி முழவின்
மண்ணார் கண்ணி னதிரும்
நன்ன ராள னடுங்கஞர் நிலையே.”
            (நற்.100)

இது,   மனையோட்கு   உரைப்பலென்றலின்   நடுங்கினா  னென்றது.
“கண்டேனின்மாயம்” என்னும் மருதக்கலியுள்.

“ஆராக் கவவின் ஒருத்திவந் தல்கற்றன்
சீரார் ஞெகிழஞ் சிலம்பச் சிவந்துநின்
போரார் கதவ மிதித்த தமையுமோ
ஆயிழை யார்க்கு மொலிகேளா வவ்வெதிர்
தாழா தெழுந்துநீ சென்ற தமையுமோ
மாறாள் சினைஇ யவளாங்கே நின்மார்பின்
நாறிணர்ப் பைந்தார் பரிந்த தமையுமோ
தேறிநீ தீயே னலேனென்று மற்றவள்
சீறடி தோயாஇறுத்த தமையுமோ.”             (கலி.90)

எனச்,   சேரிப்   பரத்தையராற்  புலந்து  தலைவனொடு  கூறியவாறு
காண்க. இன்னும் இதனானே,

“நீளிரும் பொய்கை யிரைவேட் டெழுந்த
வாளை வெண்போத் துணீஇய நாரைதன்
அடியறி வுறுதல் அஞ்சிப் பைப்பயக்
கடியிலம் புகூஉங் கள்வன் போலச்
சாஅய் ஒதுங்குந் துறைகேழ் ஊரனொ
டாவ தாக இனிநா ணுண்டோ
வருகதி லம்மவெஞ் சேரி சேர
அரிவேய் உண்கண் அவன்பெண்டிர் காணத்
தாருந் தானையும் பற்றி ஆரியர்
பிடிபயின்று தரூஉம் பெருங்களிறு போலத்
தோள்கந் தாகக் கூந்தலிற் பிணித்தவன்
மார்புகடி கொள்ளே னாயின் ஆர்வுற்
றிரந்தோர்க் கீயா தீட்டியோன் பொருள்போற்
பரந்து வெளிப்படா தாகி
வருந்துக தில்லயாய் ஓம்பிய ந