நல்லவற்றைக்
கற்பித்தலும்; அல்லவை
கடிதலும் - காமநுகர்ந்த இன்பமாகிய கற்பிற்குத் தீயவற்றைக் கடிதலும்; செவிலிக்கு உரிய ஆகும் என்ப - செவிலித்தாய்க்கு உரியவாகுமென்று கூறுவர் புலவர் எ-று. “கட்கினியாள் காதலன் காதல் வகைபுனைவாள் உட்குடையாள் ஊராண் இயல்பினாள் - உட்கி இடனறிந்து ஊடி இனிதின் உணரும் மடமொழி மாதராள் பெண்.”
(நாலடி.384) கட்கினியாள், இது
காமம்; வகைபுனைவாள், இது கற்பு; உட்குடையாள், இஃது ஒழுக்கம்; ஊராண்மை, இது சுற்றமோம்பல்; ஊடியுணர்தல், அல்லவை கடிதல். “நாலாறும் ஆறாய் நனிசிறிதாய் எப்புறனும் மேலாறும் மேலுரை சோரினும் - மேலாய வல்லாளாய் வாழுமூர் தற்புகழும் மாண்கற்பின் இல்லாள் அமர்ந்ததே யில்.”
(நாலடி.383) என்னும் வெண்பா விருந்துபுறந்தருதல்
கூறியதுமாம். இனி
‘ஆகு’ மென்றதனானே செவிலி
நற்றாய்க்கு உவந் துரைப்பனவுங் கொள்க. “கானங் கோழிக் கவர்குரற் சேவல் நுண்பொறி யெருத்திற் றண்சித ருறைப்பப் புதனீர் வாரும் பூநாறு புறவிற் சீறூ ரோளே மடந்தை வேறூர் வேந்துவிடு தொழிலொடு செல்லினுஞ் சேந்துவர லறியாது செம்மல் தேரே.”
(குறுந்.242) “மறியிடைப் படுத்த மான்பிணை போலப் புதல்வன் நடுவண னாக நன்றும் இனிது மன்றவவர் கிடக்கை முனிவின்றி நீனிற வியலகங் கவைஇய ஈனும் உம்பரும் பெறலருங் குரைத்தே.”
(ஐங்குறு.401) “வாணுதல் அரிவை மகன்முலை ஊட்டத் தானவள் சிறுபுறங் கவையினன் நன்றும் நறும்பூந் தண்புறவு அணிந்த குறும்பல் பொறைய நாடுகிழ வோனே.”
(ஐங்குறு.404) இவை உவந்து கூறியன. “பிரசங் கலந்த வெண்சுவைத் தீம்பால் விரிகதிர்ப் பொற்கலத் தொருகை யேந்திப் புடைப்பிற் சுற்றும் பூந்தலைச் சிறுகோல் உண்ணென் றோக்குபு புடைப்பத் தெண்ணீர் முத்தரிப் பொற்சிலம் பொலிப்பத் தத்துற் றரிநரைக் கூந்தல் செம்முது செவிலியர் பரீஇ மெலிந்தொழியப் பந்தர் ஓடி ஏவன் மறுக்குஞ் சிறுமது யாட்டி அறிவும் ஒழுக்கமும் யாண்டுணர்ந் தனள்கொல் கொண்ட கொழுநன் குடிவறன் உற்றெனக் கொடுத்த தந்தை கொழுஞ்சோறு உள்ளாள் ஒழுகுநீர் நுணங்கறல் போலப் பொழுது மறு
|