இஃது
அறிவரது கூற்றுக் கூறுகின்றது. (இ-ள்.) முற்கூறிய
நல்லவை யுணர்த்தலும் அல்லவை கடிதலுமாகிய கிளவி செவிலிக்கேயன்றி அறிவர்க்கு முரிய
எ-று. என்றது, அறியாத தலைவியிடத்துச் சென்று அறிந்தார் முன்னுள்ளோர் அறம் பொரு ளின்பங்களாற் கூறிய புறப்புறச் செய்யுட்களைக் கூறிக் காடுடவரென்பதாம். உ-ம்: “தெய்வந் தொழா அள்
கொழுநற் றொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யு மழை” (குறள்.55) “தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண்”
(குறள்.56) “மனைத்தக்க மாண்புடைய ளாகித்தற் கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.”
(குறள்.51) இவை நல்லவையுணர்த்தல். “ஏறியென் றெதிர்நிற்பாள் கூற்றஞ் சிறுகாலை அட்டில் புகாதாள் அரும்பிணி - அட்டதனை உண்டி யுதவாதாள் இல்வாழ்பேய் இம்மூவர் கொண்டானைக் கொல்லும் படை.”
(நாலடி.363) “தலைமகனின் தீர்ந்தொழுகல் தான்பிறரில் சேறல் நிலைமையில் தீப்பெண்டீர்ச் சார்தல் - கலனணிந்து வேற்றூர் புகுதல் விழாக்காண்டல் நோன்பெடுத்தல் கோற்றொடியார் கோளழியு மாறு.”
(அறிநெறி.94) இவை
அல்லவைகடிதல். இவை அறிவர் கூற்றாதலின் புறப்புறப் பொருளாயிற்றென உணர்ந்துகொள்க.
(13) அறிவர்க்கு எய்தியதன்மேற்
சிறப்புவிதி
|