இது,
தலைவற்குப் புலவியும் ஊடலும் நிகழுமிடங் கூறுகின்றது. (இ-ள்.) உணர்ப்புவரை இறப்பினும் - கற்பிடத்துத் தலைவி ஊடியவழி அவன் தேற்றத் தேறுமெல்லை இகந்தனளாயினும்; செய்குறி பிழைப்பினும் - களவின்கட் டலைவிசெய்த குறியைத் தானே தப்பினும்; புலத்தலும் ஊடலுங் கிழவோற்கு உரிய - உள்ளஞ் சிறிது வேறுபடுதலும் அவ்வேறுபாடு மிக்கு நீடுநின்று தேற்றியக்கால் அது நீங்குதலுந்
தலைவற்குரிய எ-று. எனவே,
கற்பிற்கும் களவிற்கும் புலத்தலும் ஊடலும் உரியவென்றார். புலவியும் ஊடலுங் கற்பிற்கே பெரும்பான்மை நிகழ்தலிற் கற்பிற்கு அவை உரியவென்கின்றார், அவை களவிற்குஞ் சிறுபான்மை உரிமைபற்றிச் சேரக் கூறினார், சூத்திரச் சுருக்கம் நோக்கி. “எவ்வி யிழந்த வறுமையாழ்ப் பாணர்.”
(குறுந்.19) இது கற்பிற் புலந்தது. “தீதிலேம் என்று தெளிப்பவுங் கைந்நீவி யாதொன்று மெங்கண் மறுத்தரவு இல்லாயின்”
(கலி.81) என்பது
ஊடல். பிற இடத்தும் ஊடுதல் அறிந்து கொள்க. “கலந்தநோய் கைம்மிகக் கண்படா என்வயின் புலந்தாயும் நீயாயிற் பொய்யானே வெல்குவை.” (கலி.46.) என்பது குறிபிழைத்துழிப் புலந்தது. “குணகடற் றிரையது பறைதபு நாரை.”
(குறுந்.128) என்பதனுள் நாரை தெய்வங் காக்கும் அயிரை
இரையை வேட்டாற்போல் நமக்கரியளாயினாளை நீ வேட்டா யென்பதனாற் குறி பிழைத்துழி ஊடினமை கூறிற்று. பிறவும்
இவ்வாறு வருவன உய்த்துணர்ந்து கொள்க.
(15) தவைன் புலகுமிடத்துத்
தோழிகூற்று நிகழ்த்துமெனல்
|