அறிந்தொழுகும்
உரிமையுடையளாகிய எண்மையானும்;
அன்பிலை கொடியை என்றலும் உரியள் - தலைவனை
அன்பிலை யென்றலுங் கொடியை யென்றலுமுரியள்
தோழி எ-று. கொடுமை
கடையாயினார் குணம். களவினுள் தன் வயினுரிமையும் அவன்வயிற்
பரத்தைமையுங் கோடலின்
இதற்குப் பரத்தைமை மறுத்தல் கொள்க. உ-ம்: “கண்டவ
ரில்லென உலகத்துள் உணராதார் தங்காது தகைவின்றித்
தாஞ்செய்யும் வினைகளுள் நெஞ்சறிந்த கொடியவை
மறைப்பினும் அறிபவர் நெஞ்சத்துக் குறுகிய
கரியில்லை யாகலின் வண்பரி நவின்ற வயமான்
செல்வ நன்கதை யறியினு நயனில்லா நாட்டத்தால் அன்பிலை
யெனவந்து கழறுவல் ஐயகேள்; மகிழ்செய் தேமொழித்
தொய்யில்சூழ் இளமுலை முகிழ்செய முள்கிய தொடர்பவ
ளுண்கண் அவிழ்பனி உறைப்பவும் நல்காது விடுவாய் இமிழ்திரைக்
கொண்க கொடியை காண்நீ; இலங்கேர் எல்வளை
யேர்தழை அல்குல் நலஞ்செல நல்கிய தொடர்பவள்
சாஅய்ப் புலந்தழப் புல்லாது விடுவாய் இலங்குநீர்ச்
சேர்ப்ப கொடியை காண்நீ; எனவாங்கு.
அனையளென் றளிமதி பெரும நின்னின் றிறைவரை
நில்லா வளையள் இவட்கினிப் பிறையேர்
சுடர்நுதற் பசலை மறையச் செல்லும்நீ மணந்தனை விடினே.”
(கலி.125) என்னும்
நெய்தற்கலி கைகோள் இரண்டற்குங் கொள்க.
(17) தலைவி
தலைவனொடு அயன்மைகூறவும் பெறுவளெனல்
|