இஃது அலர்
கூறியதனாற் பயன் இஃது என்கின்றது. (இ-ள்.)
அலரில் தோன்றுங்
காமத்திற் சிறப்பே - இருவகைக் கைகோளினும்
பிறந்த அலரான் தலைவற்குந்
தலைவிக்குங் காமத்திடத்து மிகுதிதோன்றும்
எ-று. என்றது, களவு அலராகியவழி இடையீட்டிற்கு அஞ்சிய அச்சத்தான் இருவர்க்குங்
காமஞ்சிறத்தலுங் கற்பினுட் பரத்தைமையான் அலர்தோன்றியவழிக்
காமஞ்சிறத்தலுந்
தலைவன் பிரிவின்கட்டலைவிக்குக் காமஞ் சிறத்தலும் பிறவுமாம். உ-ம்: “ஊரவர் கௌவை யெருவாக அன்னசொல் நீராக நீளுமிந் நோய்”
(குறள்.1147) “நெய்யா லெரிநுதுப்பே மென்றற்றாற் கௌவையாற் காம நுதுப்பே மெனல்”
(குறள்.1148) என்றாற்போல்வன கொள்க.
(22) இதுவுமது
|