விளையாடி
அலர் கேட்குந்தோறுந்
தலைவிக்குப் புலத்தலும் ஊடலும்
பிறந்து காமச் சிறப்பெய்தும்.
ஆங்கும் ஈங்குமெனவே அவ்விருவரிடத்துந்
தலைவன் அவை நிகழ்த்தினானாகலின் அவற்குங் காமச்
சிறப்பு ஒருவாற்றாற்
கூறியவாறாயிற்று. இது காமக்கிழத்தியரல்லாத
பரத்தையரொடு விளையாடிய பகுதியாகலின் வேறு
கூறினார். காமக்கிழத்தியர் ஊடலும் விளையாடலுந்
தலைவி ஊடலும் விளையாடலும் ‘யாறுங் குளனும்’
(தொல்.பொ.191) என்புழிக் கூறுப. அஃது அலரெனப்படாமையின்
விளையாட்டுக் கண்ணென விரித்த உருபு
வினைசெய்யிடத்து வந்தது. உ-ம்: “எஃகுடை
எழினலத் தொருத்தியொடு நெருநை வைகுபுனல்
அயர்ந்தனை யென்ப அதுவே பொய்ப்புறம் பொதிந்தயான்
கரப்பவுங் கையிகந் தலரா கின்றால் தானே.”
(அகம்.116) எனவும், “கோடுதோய்
மலிர்நிறை ஆடி யோரே.”
(அகம்.166) எனவும்
தலைவியும் பரத்தையும் பிறர் அலர்
கூறியவழிக் காமஞ் சிறந்து
புலந்தவாறு காண்க. ஆண்டுப்
பணிந்து கூறுங்காலும் விளையாடுங்காலுந்
தலைவன் காமச்சிறப்புக் காண்க.
(23) வாயில்கள்
தலைவி முன்கிழவோன் கொடுமை கூறாரெனல்
|