னெனக் கையற்றுக்
கூறுங்கூற்று; மனைவிக்கு உறுதி உள்வழி உண்டே - புலந்துவருந் தலைவிக்கு மருந்தாய் அவன் கூடுவதோர் ஆற்றான் உறுதி பயக்குமாயின் அவ்வாயில்கட்கு உளதாம் எ-று. உ-ம்: “அறியா
மையின் அன்னை யஞ்சிக் குழையன் கோதையன் குறும்பைந்
தொடியன் விழவயர் துணங்கை தழூஉகஞ் செல்ல நெடுநிமிர் தெருவிற் கைபுகு
கொடுமிடை நொதும லாளன் கதுமெனத் தாக்கலிற் கேட்போர்
உளர்கொல் இல்லைகொல் போற்றென யாணது பசலை
யென்றனள் அதனெ திர் நாணிலை எலுவ என்றுவந்
திசினே செறுநரும் விழையுஞ் செம்ம லோனென நறுநுதல்
அரிவை போற்றேன் சிறுமை பெருமையிற் காணாது
துணிந்தே.” (நற்.50) இதனுள்,
என்னறியாமையாலே அன்னாய்
நின்னையஞ்சியாங் கள்வன் துணங்கையாடுங்
களவைக் கையகப் படுப்பேமாகச் செல்லா நிற்க,
அவன் குழை முதலியவற்றை உடையனாய்த்
தெருவுமுடிந்த இடத்தே எதிர்ப்பட்டானாக,
அவ்வருளாமையின் யாணது என்கட் பசலையென்றானாக,
அவனெதிரே எஞ்சிறுமை
பெரிதாகலான் ஆராயாதே துணிந்து
நாணிலை எலுவ என்று வந்தேனெனத் தோழி மெய்யானும்
பொய்யானும் புனைந்துரைத்தவாறு
காண்க. ஏனைய வாயில்கள் கூற்று வந்துழிக்
காண்க. இங்ஙனந்
தலைவன் சிறைப்புறமாகக் கூறுவன ‘அன்புதலைப் பிரிந்த கிளவி
தோன்றின்’ (தொல்.பொ.179) என்புழிக் கூறும். (25) வாயில்கட்கு
முன்னலைப் புறமொழி பின்னிலைக்கணுரித்தெனல்
|