நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3635
Zoom In NormalZoom Out


பாணன் கூறியவாறு காண்க.

கூந்தர் கூற்று வந்துழிக் காண்க.                         (28)

இளையோர்க்குரிய கிளவி இதுவெனல்
 

170.ஆற்றது பண்புங் கருமத்து விளைவும்
ஏவல் முடிவும் வினாவுஞ் செப்பும்
ஆற்றிடைக் கண்ட பொருளும் இறைச்சியும்
தோற்றஞ் சான்ற அன்னவை பிறவும்
இளையோர்க் குரிய கிளவி யென்ப.
 

இஃது,   உழைக்குறுந்தொழிற்குங்  காப்பிற்கும்    (தொல்.பொ.171)
உரியாராகிய இளையோர்க்குரிய இலக்கணங் கூறுகின்றது.

(இ-ள்.) ஆற்றது பண்பும் - தலைவன் தலைவியுடனாயினுந் தானே
யாயினும்   போக்கு  ஒருப்பட்டுழி  வழிவிடற்பாலராகிய  இளையோர்
தண்ணிது   வெய்து   சேய்த்து  அணித்தென்று  ஆற்றது  நிலைமை
கூறுதலும்;    கருமத்து   விளைவும்   -   ஒன்றாகச்   சென்றுவந்து
செய்பொருண்  முடிக்குமாறு  அறிந்து  கூறுதலும்;  ஏவல்  முடிவும் -
இன்னுழி    இன்னது    செய்க    என்று   ஏவியக்கால்   அதனை
முடித்துவந்தமை  கூறலும்;  வினாவும்  -  தலைவன்  ஏவலைத் தாங்
கேட்டலும்;  செப்பும்  -  தலைவன் வினாவாத வழியும் தலைவிக்காக
வாயினுஞ் செப்பத் தகுவன தலைவற்கு அறிவு கூறுதலும்; ஆற்றிடைக்
கண்ட   பொருளும்   -   செல்சுரத்துக்  கண்ட  நிமித்தம்  முதலிய
பொருள்களைத்    தலைவர்க்குந்   தலைவிக்கும்   உறுதிபயக்குமாறு
கூறலும்;   இறைச்சியும்   -   ஆண்டுமாவும்   புள்ளும்   புணர்ந்து
விளையாடுவனவற்றை அவ்விருவர்க்குமாயினுந் தலைவற்கே யாயினுங்
காட்டியும்  ஊறு  செய்யுங் கோண்மாக்களை அகற்றியுங் கூறுவனவும்;
தோற்றஞ்   சான்ற   அன்னவை  பிறவும்  -  அங்ஙனம்  அவற்குத்
தோற்றுவித்தற்கமைந்த    அவைபோல்வன    பிற    கூற்றுக்களும்;
இளையோர்க்கு   உரிய   கிளவி   என்ப  -  இளையோர்க்கு  உரிய
கூற்றென்று கூறுவர் ஆசிரியர் எ-று.

தலைவியது செய்தி அறிந்துவந்து கூறுவனவும் பிற பொருளுணர்ந்து
வந்து