நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3638
Zoom In NormalZoom Out


வையென்றுமாம்.                ‘ஆக்கிய’        வென்றதனானே
வேளாளர்க்கும்பின்முறை வதுவை கொள்க. தொன்மனைவி யென்னாது
‘முறை’   யென்றதனானே   அவரும்  பெருஞ்  சிறப்புச்செய்து  ஒரு
கோத்திரத்தராய்   ஒன்றுபட்டொழுகுவரென்பது  கூறினார்.  இங்ஙனந்
தொன்முறையார்   பின்முறையாரை   மகிழ்ச்சி   செய்தமை   கண்டு
இத்தன்மையாரை    இறந்தொழுகித்    தவறுசெய்தேமே   யென்றும்
பின்முறையார்  அவர்  புதல்வரைக்  கண்டு மகிழ்ச்சி செய்து வாயில்
நேர்ந்த குணம்பற்றி இவரை இறந்தொழுகித் தவறுசெய்தேமேயென்றும்
பரத்தைமை   நீங்குவனென்றார்.  ‘புகினு’  மெனவே  பிறர்  மனைப்
புதல்வரென்பது  பெற்றாம்.  தொன்முறை  மனைவி எதிர்ப்பட்டதற்கு
இலக்கியம் வந்துழிக் காண்க.

இனிப், பரத்தைமையிற் பிரிவொழிந்து மனைக்கண் இருந்ததற்கு,

உ-ம்:

“மாத ருண்கண் மகன்விளை யாடக்
காதலிற் றழீஇ யினிதிருந் தனனே
தாதார் பிரச முரலும்
போதார் புறவின் நாடுகிழ வோனே.”     
(ஐங்குறு.406)

இன்னும் இவ்வாறு வருவன பிறவும் உய்த்துணர்ந்து கொள்க.  (31)

தலைவி புலவி நீங்குங்கால முணர்த்தல்
 

173. தாய்போற் கழறித் தழீக் கோடல்
ஆய்மனைக் கிழத்திக்கும் உரித்தென மொழிப
கவவொடு மயங்கிய காலை யான.
 

இது, தலைவி புலவி கடைக்கொள்ளும் காலம் உணர்த்துகின்றது.

(இ-ள்.)    தாய்பாற் கழறித் தழீஇக் கோடல் - பரத்தையிற் பிரிவு
நீங்கிய  தலைவன்   தன்னினும் உயர்ந்த குணத்தினளெனக் கொள்ளு
மாற்றான்  மேல்நின்று மெய்கூறுங் கேளிராகிய தாயரைப்போலக் கழறி
அவன்   மனக்கவலையை   மாற்றிப்   பண்டுபோல   மனங்கோடல்;
ஆய்மனைக்   கிழத்திக்கும்   உரித்தென   மொழிப   -  ஆராய்ந்த
மனையறம்  நிகழ்த்துங்  கிழத்திக்கும்  உரித்தென்று கூறுப; கவவொடு
மயங்கிய காலையான - அவன் முயக்கத்தான் மயங்கிய காலத்து எ-று.

என்றது,   தலைவன் தவற்றிற்கு உடம்பட்டுக் கலங்கினமை கண்ட
தலைவி  அதற்கு  ஆற்றாது  தன்  மனத்துப் புலவியெல்லாம் மாற்றி
இதற்கொண்டும் இனை