இதுவுந்
தலைவி குணச் சிறப்புக் கூறுகின்றது. (இ-ள்.)
அவன் சோர்பு காத்தல் கடன் எனப்படுதலின் - தான் நிகழ்த்துகின்ற இல்லறத்தான் தலைவற்கு இழுக்கம் பிறவாமற் பாதுகாத்தல் தலைவிக்குக் கடப்பாடென்று கூறப்படுதலான், மகன் தாய் உயர்பும் தன் உயர்பு ஆகும் - மகன் தாயாகிய மாற்றாளைத் தன்னின் இழிந்தா ளாகக் கருதாது தன்னோடு ஒப்ப உயர்ந்தாளாகக் கொண்டொழுகுதல் தனது உயர்ச்சியாம்; செல்வன் பணிமொழி இயல்பு ஆகலான - தலைவன் இவ்வாறொழுகுகவென்று தமக்குப் பணித்த மொழி நூலிலக்கணத்தான் ஆன
மொழியாகலான் எ-று. ஈண்டு
‘மகன்றா’ யென்றது பின்முறை யாக்கிய வதுவை யாளை. இன்னும்அவன் சோர்பு காத்தல் தனக்குக் கடனென்று கூறப்படுதலானே முன்முறையாக்கிய வதுவையாளைத்
தம்மின் உயர்ந்தாளென்றும் வழிபாடாற்றுதலும் பின்முறை
வதுவையாளுக்கு உயர்பாஞ் செல்வன் பணித்த மொழியானென்றவாறு. ஈண்டு ‘மகன்றா’யென்றது உயர்ந்தாளை, உய்த்துக்கொண்டுணர்தல் (666) என்னு முத்தியான் இவையிரண்டும் பொருள். ‘செல்வ’னென்றார், பன்மக்களையுந் தன்னாணை வழியிலே இருத்துந் திருவுடைமை பற்றி. இவை வந்த செய்யுள்கள் உய்த்துணர்க.
(33) பாசறைக்கண்
தலைவியரொடும் போகான் எனல்
|