நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3643
Zoom In NormalZoom Out


ப்  புகழ்ந்து  கூறுங்கூற்று; வினைவயின் உரிய  என்ப - காரியங்களை
நிகழ்த்துங் காரணத்திடத்து உரியவென்று கூறுவார் ஆசிரியர் எ-று.

அக்காரணமாவன,     கல்வியுங்,  கொடையும், பொருள் செயலும்,
முற்றகப்பட்டோனை       முற்றுவிடுத்தலுமாகிய        காரியகளை
நிகழ்த்துவலெனக்   கூறுவன.   இவ்  வாள்வினைச்  சிறப்பை  யான்
எய்துவலெனத்  தன்னைப் புகழவே அதுபற்றித் தலைவி பிரிவாற்றுதல்
பயனாயிற்று.

“இல்லென இரந்தோர்க்கொன் றீயாமை யிளிவென” (கலி.2)

என்றவழி   யான்   இளிவரவு   எய்தேனென்றலிற்  புகழுக்குரியேன்
யானெக் கூறியவாறு காண்க. ஏனையவும் வந்துழிக் காண்க.      (40)

பாங்கற்கு எய்திய தொருமருங்கு மறுத்தல்
 

182.மொழியெதிர் மொழிதல் பாங்கற் குரித்தே.
 

இது, மேற் பார்ப்பார்க்குரியன பாங்கற்குமா மென எய்துவித்ததனை
ஒருமருங்கு மறுக்கின்றது.

(இ-ள்.)    மொழியெதிர்  மொழிதல்  -  பார்ப்பானைப்  போலக்
காமநிலை   உரைத்தல்   போல்வன   கூறுங்கால்  தலைவன்  கூறிய
மொழிக்கு  எதிர்  கூறுதல்;  பாங்கற்கு உரித்து - பாங்கனுக்கு உரித்து
எ-று.

இது  களவிற்கும் பொது : அது பாங்கற்கூட்டத்துக் காண்க. கற்பிற்
புறத்தொழுக்கத்துத்  தலைவன்  புகாமற்  கூறுவன  வந்துழிக் காண்க.
‘உரித்’   தென்றதனான்  தலைவன்  இடுக்கண்  கண்டுழி  எற்றினான்
ஆயிற்றென அவன் மொழிக்கு முன்னே வினாதலுங் கொள்க.     (41)

இதுவும் பாங்கற்குரியதோரிலக்கணங் கூறல்
 

183.குறித்தெதிர் மொழிதல் அஃகித் தோன்றும்.
 

இதுவும் பாங்கற்குரியதோ ரிலக்கணங் கூறுகின்றது.

(இ-ள்.)   குறித்து எதி்ர்மொழிதல் - தலைவன் குறிப்பினை அவன்
கூறாமல்  தான்  குறித்துணர்ந்ததற்கு எதிர்மொழி கொடுத்தல், அஃகித்
தான்றும் - சுருங்கித் தோன்றும் எ-று.

அவன்   குறிப்பறிந்து  கூறல்  சிறுவரவிற்றெனவே  ‘காம  நிலை
யுரைத்தல்’
  (தொல்.பொ.177)   என்னுஞ்   சூத்திரத்தின்கட்   கூறிய
‘ஆவொடு  பட்ட  நிமித்தம்’ ஆயின் பார்ப்பான்  கூறக்கேட்டுத் தான்
கூறவும்   பெறுமெனவும்  ;  ஏனையவுங்  கிழவன்  கூறாமல்  தானே
கூறவும் பெறுமெனவுங் கூறியவாறாயிற்று.                     (42)

தலைவன்வற்புறுத்திப் பிரிவனெனல்
 

184. துன்புறு பொழுதினும் எல்லாங் கிழவன்
வன்புறுத் தல்லது சேறல் இல்லை.