இஃது,
எஞ்சிய பிரிவிற்கு வரையறை கூறுகின்றது. (இ-ள்.)
ஏனைப் பிரிவும் அவ்வயின் நிலையும் - கழிந்து நின்ற தூதிற்கும் பொருளிற்கும்
பிரிந்து மீளும் எல்லையும் யாண்டினதகம் (எ-று.) உ-ம்: “மண்கண் குளிர்ப்ப வீசித் தண்பெயல் பாடுலந் தன்றே பறைக்குரல் எழிலி புதன்மிசைத் தளவின் இதன்முட் செந்நனை நெடுங்குலைப் பிடவமோ டொருங்குபிணி யவிழக் காடே கம்மென்றன்றே யவல கோடுடைந் தன்ன கோடற் பைம்பயிர்ப் பதவின் பாவை முனைஇ மதவுநடை யண்ண னல்லே றமர்பிணை தழீஇத் தண்ணறல் பருகித் தாழ்ந்துபட் டனவே யனையகொல் வாழி தோழி மனைய தாழ்வின் நொச்சி சூழ்வன மலரும் மௌவன் மாச்சினை காட்டி அவ்வள வென்றார் ஆண்டுச்செய் பொருளே.” (அகம்.23) இது பொருட்பிரிவின்கட் கார்குறித்து ஆறு திங்கள் இடையிட்டது. “நெஞ்சு
நடுக்குற” (கலி.24) என்னும் பாலைக்கலியுள் “நடுநின்று செய்பொருண் முற்றுமள
வென்றார்” என்றலின் எத்துணையும் அணித்தாக மீள்வலென்றதாம். இவற்றிற்குப் பேரெல்லைவந்த செய்யுள் வந்துழிக் காண்க.
(49) தலைவன் முதலியோர்க்குரிய மரபு
கூறல்
|