நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3651
Zoom In NormalZoom Out


வானப்   பிரத்தமுஞ்  சன்னியாசமும்;  எனவே, இல்லறத்தின் பின்னர்
இவற்றின்கண்ணே   நின்று   பின்னர்  மெய்  யுணர்ந்து  வீடுபெறுப
என்றார்.  இவ்வீடு  பேற்றினை  இன்றியமையாது இவ்வில்லறமென்பது
இதன்    பயன்.   இது   காஞ்சியாகாதோ   வெனின்   ஆகாது   ;
(தங்குறிப்பினானன்றி   நிலையாமை   தானே  வருவதுதான்,  சிறந்து
நிலைபெற்று  நிற்குமெனச்  சான்றோர்  கூறுதலும், அது தானே வந்து
நிற்றலுங்   காஞ்சி   ;   இஃது   அன்னதன்றிச்  சிறந்த  வீட்டின்ப
வேட்கையான்    தாமே   எல்லாவற்றையும்   பற்றறத்   துறத்தலின்
அகப்பொருட்  பகுதியாம்)  இதனானே,  இவ்வோத்தினுட் பலவழியுங்
கூறிய   காமம்,  நிலையின்மை  யின்மேல்  இன்பத்தை  விளைத்தே
வருதலிற் காஞ்சியாகாமை யுணர்க.

உ-ம்:

“அரும்பெறற் கற்பின் அருந்ததி யன்ன
பெரும்பெயர்ப் பெண்டிர் எனினும் - விரும்பிப்
பெறுநசையாற் பின்னிற்பார் இன்மையே பேணும்
நறுநுதலாள் நன்மைத் துணை.”
            (நாலடி.381)

இதனுள்,  அருந்ததியைப் போலுந் தமக்குப் பெரும் பொருள்களை
நச்சுதலாலே  இரப்பாரது வறுமையே விரும்பிப் பாதுகாத்து, அவர்க்கு
வேண்டுவன   கொடுக்கும்   மகளிர்,  நாஞ்செல்கின்ற  வானப்பிரத்த
காருகத்திற்குத்   துணையாவரெனத்  தலைவன்  கூறவே  தலைவியும்
பொருள்களிற் பற்றற்றாளாய் யாமுந் துறவறத்தின்மேற் செல்வாமெனக்
கூறியவாறு காண்க. பிறவும் வந்துழிக் காண்க.                 (51)

வாயில்களாவார் இவர் எனல்
 

193. தோழி தாயே பார்ப்பான் பாங்கன்
பாணன் பாடினி யிளையர் விருந்தினர்
கூத்தர் விறலியர் அறிவர் கண்டோர்
யாத்த சிறப்பின் வாயில்க ளென்ப.
 

இது, வாயில்களைத் தொகுத்து   அவருந்  துறவிற்கு  உரியராவர்
என்கின்றது.

(இ-ள்.)  தோழி  - அன்பாற் சிறந்த தோழியும் ; தாய் - அவளே
போலுஞ்  செவிலியும்  ;  பார்ப்பான் - அவரின் ஆற்றலுடைய பார்ப்
பானும்  ;  பாங்கன்  -  அவரேபோலும்  பாங்கனும்  ;  பாணன்  -
பாங்குபட்  டொழுகும்  பாணனும்  ;  பாடினி  -  தலைவி  மாட்டுப்
பாங்காயொழுகும்   பாடினியும்   ;   இளையர்  -  என்றும்  பிரியா
இளையரும் ; விருந்தினர் - இருவரும் அன்பு செய்யும்  விருந்தினரும்
; கூத்தர் -