ணர்த்துதலும்,
இறைச்சிப் பொருண் முதலியன நாடக வழக்கின் வழீஇயவாறுந்,
தேரும்
யானையும்’ (தொல்.பொ.212) ‘அறக்கழிவுடையன’
(தொல்.பொ.218) ‘தாயத்தி
னடையா’
(தொ.பொ.221) என்னுஞ் சூத்திர
முதலியன உலகியல்வழக்கின்
வழீஇயவாறுங் கூறி, அவ்வழு அமைக்கின்றவாறு
மேலே காண்க.
புறத்திணை யியலுட் புறத்திணை வழுக்கூறி
அகப்பொருட்குரிய
வழுவே ஈண்டுக் கூறுகின்றதென்றுணர்க. ‘இயலா’
என்றதனான் ‘என்செய்வா’மென்றவழி’ ப் ‘பொன் செய்வா’ மென்றாற்போல வினாவிற் பயவாது இறைபயந்தாற்
போல நிற்பனவுங்கொள்க. இன்னும் அதனானே செய்யுளிடத்துச் சொற்பொருளானன்றித் தொடர்பொருளாற் பொருள்
வேறுபட இசைத்தலுங்கொள்க. அது சூத்திரத்துஞ் செய்யுளுள்ளும் பொருள் கூறுமாற்றானுணர்க.
(1) முற்கூறிய இருவகையானும் பொருள் வேறுபட்டு வழீ இயமையுமாறு கூறல்
|