இஃது, எய்தாத தெய்துவித்து வழுவமைக்கின்றது. (இ-ள்.)
பால்கெழு கிளவி - இலக்கணத்திற் பக்கச் சொல் ; நால்வர்க்கும் உரித்து - தோழியும் செவிலியும் நற்றாயும் பாங்கனு மென்னும் நால்வர்க்கும் உரித்தாம் எ-று. மேல்
‘இருவர்க்கு முரிய பாற்கிளவி’(196) என்றலின் தலைவனையுந் தலைவியையும் ஆண்டே கூறலின் ஈண்டு இந்நால் வருமென்றே கொள்க. “தருமணற் கிடந்த பாவையென் அருமக ளேயென முயங்கினள் அழுமே.”
(அகம்.165) இது, நற்றாய் மணற்பாவையைப்
பெண்பாலாகக் கூறித் தழீஇக் கொண்டழுதலிற் பால்கெழு கிளவியாயிற்று. “தான்றாயாக் கோங்கந் தளர்ந்து முலைகொடுப்ப ஈன்றாய்நீ பாவை யிருங்குரவே - ஈன்றாள் மொழிகாட்டா யாயினு முள்ளெயிற்றாள் சென்ற வழிகாட்டா யீதென்று வந்து.”
(திணை.நூற்.65) என்பது செவிலி குரவை வழிகாட்டென்றலிற் பால்கெழு கிளவியாயிற்று. ஏனையிரண்டும் மேல்விலக்குப. இறந்தது காத்தல்
|