இது.
பெண்டிர்க்கியல்பாகிய
மடமை யழிவதொரு வழுவமைக்கின்றது. (இ-ள்,) தன்வயின்
கரத்தலும் - தலைவன் தலைவியிடத்தே புறத்தொழுக்க மின்றென்று பொய்கூறலும்: அவன் வயின் வேட்டலும் - அங்ஙனங் கரந்து கூறிய தலைவன்கட் டலைவி விரும்புதலும்; அன்ன இடங்கள் அல்வழி எல்லாம் - ஆகிய அவைபோலும் இடங்களல்லாத இடத்தெல்லாம்;மடனொடு நிற்றல் கடன் என மொழிப - தலைவி மடமையுடையளாகி நிற்றல் கடப்பாடென்று கூறுவர் புலவர் எ-று, எனவே,
இவ்வீரிடத்தும் மடனழிதலுடையளென வழுவமைத்தார். அது “குதிரை வழங்கிவருவல்” (கலி.96) என்று அவன் கரந்தவழி, அதனை மெய்யெனக் கோடலன்றே மடமை, அங்ஙனங்கொள்ளாது அறிந்தேன் குதிரைதானெனப் பரத்தையர்கட் டங்கினாயெனக் கூறுதலின் இது மடனழிந்த வழுவமைதியாயிற்று, “கவவுக்கை ஞெகிழ்ந்தமை போற்றி மதவுநடைச் செவிலி கையென் புதல்வனை நோக்கி நல்லோர்க் கொத்தனிர் நீயிர் இஃதோ செல்வற் கொத்தனம் யாமென மெல்லவென் மகன்வயிற் பெயர்தந் தேனே.”
(அகம்.26) என்றவழி,
மனத்து நிகழ்ந்த வேட்கையை மறைத்து வன்கண்மை செய்து மாறினமையின் அதுவும் மடனழிந்து வழுவாகியமைந்தது. அன்ன இடமென்றதனான், “யாரினுங் காதல மென்றேனா ஊடினாள் யாரினும் யாரினும் என்று.”
(குறள்.1314) என்றாற்போல மடனழிய வருவனவுங்
|