றிக் கொடுஞ்சுழிப் புகாஅர்த் தெய்வ நோக்கிக் கடுஞ்சூள் தருகுவல் நினக்கே.”
(அகம்.110) இது தலைப்பாடு. “நேரிறை முன்கை பற்றி நுமர்தர நாடறி நன்மணம் அயர்கஞ் சின்னாள் கலங்கல் ஓம்புமின் இலங்கிழை யீரென ஈர நன்மொழி தீரக் கூறித் துணைபுணர் ஏற்றின் எம்மொடு வந்து துஞ்சா முழவின் மூதூர் வாயில் உண்டுறை நிறுத்துப் பெயர்ந்தனன் அதற்கொண் டன்றை அன்ன விருப்போ டென்றும் இரவரன் மாலையனே வரு தோறுங் காவலர் கடுகினுங் கதநாய் குரைப்பினும் நீதுயில் எழினும் நிலவுவெளிப் படினும் வேய்புரை மென்தோள் இன்துயில் என்றும் பெறாஅன் பெயரினும் முனிய லுறாஅன் இளமையின் இகந்தன்றும் இலனே.”
(குறிஞ்சிப்.231-244) எனவும், “வளமையில் தன்நிலை திரிந்தன்றும் இலனே.”
(குறிஞ்சி.245) எனவும், “கன்மழை பொழிந்த அகன்கண் அருவி ஆடுகழை அடுக்கத் திழிதரு நாடன் பெருவரை யன்ன திருவிறல் வியன்மார்பு முயங்காது கழிந்த நாளிவண் மயங்கிதழ் மழைக்கண் கலுழும் அன்னாய்” (ஐங்குறு.220) என வருவன உண்மைசெப்பல். “காமர் கடும்புனல்”
(கலி.39) என்பதனுள் இரண்டு வந்தன. பிறபுமன்ன.
(13) தோழி அறத்தொடு நிற்றல் தலைவி விருப்பத்தான்நிகழுமெனல்
|