நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3668
Zoom In NormalZoom Out


ழுகுதல் இலக்கணமென்றற்கும் மறைபுலப்படுத்துதல்  வழுவென்றற்குங்
காரணம் கூறுகின்றது.

(இ-ள்.)  செறிவும் - அடக்கமும்;  நிறைவும் - மறைபுலப் படாமல்
நிறுத்தும் உள்ளமும்; செம்மையும்-மனக்கோட்ட  மின்மையும்: செப்பும்
-    களவின்கட்    செய்யத்    தகுவன    கூறலும்;   அறிவும்  -
நன்மைபயப்பனவுந் தீமை பயப்பனவும் அறிவித்தலும்; அருமையும்  -
உள்ளக்கருத்தறித   லருமையும்;   பெண்பாலான  -  இவையெல்லாம்
பெண்பாற்குக் காரணங்கள் எ-று.

இவையுடையளெனவே       மறைபுலப்படுத்தற்கு    உரியளல்ல
ளென்பதூஉம் அதனைப் புலப்படுத்தலின் முற்கூறியன வழுவமைத்தன
வுமாயிற்று. இவை வருஞ்சூத்திரத்திற்கும் ஒத்தலிற் சிங்கநோக்கு.   (15)

வரைதல் வேட்கைக்குரிய கூற்றுக்கள் இவையெனல்
 

210. பொழுதும் ஆறுங் காப்புமென் றிவற்றின்
வழுவின் ஆகிய குற்றங் காட்டலும்
தன்னை யழிதலும் அவனூ றஞ்சலும்
இரவினும் பகலினும் நீவரல் என்றலுங்
கிழவோன் தன்னை வாரல் என்றலும்
நன்மையுந் தீமையும் பிறிதினைக் கூறலும்
புரைபட வந்த அன்னவை பிறவும்
வரைதல் வேட்கைப் பொருள என்ப.
 

இதுவும்      தோழிக்குந்      தலைவிக்கும்     உரியனவாகிய
வழுவமைக்கின்றது.

(இ-ள்.) பொழுதும் ஆறும் காப்பும்என்றிவற்றின் வழுவின் ஆகிய
குற்றங்  காட்டலும் - இராப்பொழுதும் அக்காலத்துவழியுங் கண்ணுறும்
இடத்துள்ள காவலுமென்று கூறப்பட்டவை  மூன்றனது பழையமுறையிற்
பிறழுதலாற் தலைவன்குளதாகிய குற்றத்தை யுணர்த்தலும்:

இவை தலைவற்கு அச்சம் உளவாகக் கருதுதலும் அவனால் நிகழும்
இன்பத்தைத்    துன்பமாகக்   கருதுதலும்  உடையனவாயிற்  றேனும்
அன்புபற்றிக்    கூறலின்    அமைந்தது.   அப்பொழுதிற்றலைவனது
செலவுவரவு நிகழ்ந்துழியே இக்குற்றங் காட்டுவதென்று கொள்க.

“மன்றுபா டவிந்து,,,,,,,,,”                  (அகம்.128)

என்பது பொழுது வழுவுதலிற் குற்றங்காட்டியது.

“ஈர்ந்த ணாடையை எல்லி மாலையை
சோர்ந்துவீழ் கதுப்பினாள் செய்குறி நீவரின்
ஒளிதிகழ் ஞெகிழியர் கவணையர் வில்லர்
களிறென ஆர்ப்பவர் ஏனல்கா வலரே.”      
(கலி.52)

இது. காப்பினான் வழுவுணர்த்தியது.

தன்னை அழிதலும் - அவன்  அக்காலத்து  அவ்வழியில் தனியே
வருதற்கு யான் ஏதுவாயினேன் எனத் த