ன்னை அழிவு படுத்துரைத்தலும்: “நீதவ றுடையையும் அல்லை நின்வயின் ஆனா அரும்படர் செய்த யானே தோழி தவறுடை யேனே.”
(அகம்.72) அவன்
வரவினை உவவாது துன்பங்கூர்தல் வழுவாயினும். அதுவும் அவன்கண் அன்பாதலின் அமைத்தார். அவண்
ஊறு அஞ்சலும் - அவ்வழியிடத்துத் தலைவற்கு வரும் ஏதமஞ்சுதலும்: “அஞ்சுவல் வாழியைய ஆரிருள் கொங்கியர் ஈன்ற மைந்தின் வெஞ்சின உழுவை திரிதருங் காடே.” இஃது. அவனைப் புலிநலியுமென்று அஞ்சியது. “ஒருநாள் விழுமம் உறினும் வழிநாள் வாழ்குவள் அல்லளென் றோழி”
(அகம்.18) என்பதும் அது. ஆறின்னாமையாவது
விலங்குமுதலியவற்றான் வரவிற்கு இடையீடு நிகழுமென் றஞ்சுதல். ஏத்தல், எளித்தலின் வேறாயிற்று. இது நன்குமதியாமையின் வழுவாயினும் அன்பு மிகுதியான் அமைத்தார். இரவினும்
பகலினும் நீ வரல் என்றலும் - இராப்பொழுதின் கண்ணும் பகற்பொழுதின்கண்ணுந் தலைவனைக் குறியிடத்து வருக வெனத் தோழி கூறலும்: “வல்வில் இளையரொ டெல்லிச் செல்லாது சேர்ந்தனை செலினே சிதைகுவ துண்டோ பெண்ணை யோங்கிய வெண்மணற் படப்பை அன்றில் அகவும் ஆங்கண் சிறுகுரல் நெய்தலெம் பெருங்கழி நாட்டே” (அகம்.120) எனவும், “பூவேய் புன்னையந் தண்பொழில் வாவே தெய்ய மணந்தனை செலற்கே” (அகம்.240) எனவும் வரும். களவு
அறிவுறுமென்று அஞ்சாது வருகவென்றலின் வழுவேனுந் தலைவி வருத்தம் பற்றிக் கூறலின் அமைத்தார். கிழவோன்றன்னை
வாரல் என்றலும் - தோழியுந் தலைவியுந் தலைமை செய்துகொண்டு தலைவனை வாரற்க என்று கூறுதலும்: தலைமை வழுவேனும் அன்பான் அமைத்தார். “இரவு வாரல் ஐய விரவுவீ அகலறை வரிக்குஞ் சாரல் பகலும் பெறுதியிவள் தடமேன் றோளே.”
(கலி.49) இஃது, இரவுவாரலென்றது. “பகல்வரிற் கவ்வை யஞ்சுதும்”
(அகம்.118) என்றது பகல்வாரலென்றது. “நல்வரை நாட நீவரின் மெல்லிய லோருந் தான்வா ழலளே.”
(அகம்.112) இஃது, இரவும் பகலும் வாரலென்றது. நன்மையும் தீமையும் பிறிதினைக்
கூறலும் - பிறிதொரு பொருண்மேல் வைத்து நன்மையுந், தீமையுந் தலைவற்கேற்பக் கூறலும்: “கழிபெருங் காதலர் ஆயினுஞ் சான்றோர் பழியொடு வரூஉம் இன்பம் வெஃகார்”
(அகம்.111) எனப் பிறர்மேல் வைத்துத் தலைவனை அறிவுகொளுத்தினமையின் வழுவாயமைந்தது. “பழியொடு வரூஉ மின்பம் வெஃகார்” எனவே புகழொடு வரூஉம் இன்பம்
|