நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3673
Zoom In NormalZoom Out


அடைபொருள்   -   இவள்   நும்பால்  அடைதற்குக்  காரணமாகிய
பொருளென்க.                                           (20)

மேலதற்கொரு புறனடை
 

215. அன்பே அறனே இன்பம் நாணொடு
துறந்த ஒழுக்கம் பழித்தன் றாகலின்
ஒன்றும் வேண்டா காப்பி னுள்ளே.
 

இது, தோழிபொருளென  மொழிதற்குத்   தலைவியும்  உடன்பட்டு
நிற்றற்குரிய ளென்றலின் மேலதற்கொரு புறனடை.

(இ-ள்.)  காப்பினுள்  - காவன் மிகுதியான் தலைவிக்கு வருத்தம்
நிகழ்ந்தவிடத்து; அன்பே அறனே இன்பம் நாணொடு துறந்த ஒழுக்கம்
-  தலைவன்கண்  நிகழும் அன்புங் குடிப்பிறந்தோர் ஒழுகும் அறனுந்
தமக்   கின்றியமையா   இன்பமும்   நாணும்   அகன்ற  ஒழுகலாறு;
பழித்தன்று  ஆகலின்  ஒன்றும்  -  பழியுடைத்தன்று ஆகையினாலே
புலனெறிவழக்கிற்குப்    பொருந்தும்;    வேண்டா    -   அவற்றை
வழுவாமென்று களையல் வேண்டா எ-று.

எனவே, பொருளென மொழிதல்  தலைவிக்கும்  உடன்பாடென்று
அமைத்தாராயிற்று.                                       (21)

தலைவன்பிரியக்கருதின் இவ்வாறுங் கூறுவரெனல்
 

216. சுரமென மொழிதலும் வரைநிலை யின்றே.
 

இது, தோழிக்குந் தலைவிக்கு முரியதொரு வழுவமைக்கின்றது.

(இ-ள்.)  தலைவன் பிரியக் கருதியவழித் தோழியுந் தலைவியும் நீ
போகின்றவிடம்   எவ்வாற்றானும்   போதற்கரிய   நிலமெனக்  கூறி
விலக்குதலும் நீக்குநிலைமையின்று எ-று.

உ-ம்:

“இடுமுள் நெடுவேலி போலக் கொலைவர்
கொடுமரந் தேய்த்தார் பதுக்கை நிரைத்த
கடுநவை ஆராற் றறுசுனை முற்றி
உடங்குநீர் வேட்ட உடம்புயங் கியானை
கடுந்தாம் பதிபாங்குக் கைதெறப் பட்டு
வெறிநிரை வேறாகச் சாரச் சாரலோடி
நெறிமயக் குற்ற நிரம்பாநீ டத்தஞ்
சிறுநனி நீதுஞ்சி யேற்பினும் அஞ்சும்
நறுநுதல் நீத்துப் பொருள்வயிற் செல்வோய்
உரனுடை யுள்ளத்தை”                     
(கலி.12)

எனச் சுரமெனக் கூறினாள்.

தலைவியுந்  தோழியாற்  கூற்றுநிகழ்த்தும். சூத்திரம் பொதுப்படக்
கிடத்தலின்   தலைவி   உடன்போகக்   கருதியவழித்   தலைவனுஞ்
சுரமெனக் கூறுதல் கொள்க.

“எல்வளை யெம்மொடு நீவரின் யாழநின்
மெல்லியல் மேவந்த சீறடித் தாமரை
அல்லிசேர் ஆயித ழரக்குத்தோய்ந் தவைபோலக்
கல்லுறின் அவ்வடி கறுக்குந வல்லவோ”       
(கலி.13)

என வரும்.                                             (22)

உலகவழக்கு செய்யுட்குமாமெனல்
 

217. உயர்ந்தோ