நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3674
Zoom In NormalZoom Out


ர் கிளவியும் வழக்கொடு புணர்தலின்

வழக்குவழிப் படுத்தல் செய்யுட்குக் கடனே

இது,  முன்னர்  உலகியல்    வழக்கென்றது   செய்யுட்காமென்று
அமைக்கின்றது.

(இ-ள்.) உயர்ந்தோர் கிளவியும் வழக்கொடு புணர்தலின்- உயர்ந்த
மக்கள்    கூறுங்கூற்றும்    வேதநெறியொடு    கூடுதலின்;  வழக்கு
வழிப்படுத்தல்  செய்யுட்குக்  கடனே  -  அவ்வழக்கினது  நெறியிலே
நடத்தல் செய்யுட்கு முறைமை எ-று.

‘வழக்கெனப்  படுவது’   (தொல்.பொ.648)   என்னும்  மரபியற்
சூத்திரத்தான்    வழக்கு    உயர்ந்தோர்   கண்ணதாயிற்று.   அவர்
அகத்தியனார்   முதலியோரென்பது  பாயிரத்துட்  கூறினாம்.  அவை
சான்றோர்  செய்யுளுட்  காண்க.  இதனை  மேலைச் சூத்திரத்திற்கும்
எய்துவிக்க.                                             (23)

உலகியலல்லாதனவும் பயன்படவரின்
புலனெறிவழக்கிற்கூறல் வழுவன்றெனல்
 

218.

அறக்கழிவு உடையன பொருட்பயம் படவரின்
வழக்கென வழங்கலும் பழித்தன் றென்ப.
 

இஃது, உலகியல் வழக்கன்றிப் பொருள் கூறினும் அமைகவென்றது.

(இ-ள்.)  அறக்கழிவு உடையன - உலக வழக்கத்திற்குப் பொருத்த
மில்லாத  கூற்றுக்கள்;  பொருட்பயம்  படவரின்  - அகப்பொருட்குப்
பயமுடைத்தாக   வருமாயின்;  வழக்கென  வழங்கலும்  -  அவற்றை
வழக்கென்றே  புலனெறி  வழக்கஞ்  செய்தலும்; பழித்தன்று என்ப -
பழியுடைத்தன்றென்று கூறுவாராசிரியர் எ-று.

தலைவன்     குறையுற்று நிற்கின்றவாற்றைத் தோழி தலைவிக்குக்
கூறுங்கால்    தன்னை   அவன்   நயந்தான்போலத்   தலைவிக்குக்
கூறுவனவும். “பொய்யாக வீழ்ந்தே னவன்மார்பின்” (கலி.37) எனப்
படைத்து  மொழிவனவுந்.  தலைவி ‘காமக் கிழவ னுள்வழிப் படுதலும்’
‘தாவி னன்மொழி கிழவி கிளத்தலும்’  (தொல்.பொ.115)  போல்வன
பிறவும் அறக்கழிவுடையனவாம். தலைவி தனக்கு மறை புலப்படுத்தாது
வருந்துகின்ற  காலத்து அதனைத் தனக்குப் புலப்படுவித்துக்கொண்டே
அவளை ஆற்றுவித்தற் பொருட்டு அறக்கழிவுடையன கூறலின் அவை
பொருட்குப் பயன்றந் தனவாம்.

“நெருந லெல்லை யேனற் றோன்றி”         (அகம்.32)

என்பதனுட்,

“சிறுபுறங் கவையின னாக வதற்கொண்
டிகுபெயன் மண்ணின் ஞெகிழ்பஞ ருற்றவென்
உள்ளவ னறித லஞ்சி யுள்ளில்
கடிய கூறிக் கைபிணி விடாஅ”

எனத் தலைவன் தன்னை நயந்தானென இவள் கொ