ண்டாள் கொல்லெனத் தலைவி கருதுமாற்றான் தோழி கூறவே தலைவி மறை புலப்படுத்துவ ளென்பது பயனாயிற்று. “கயமலருண்கண்ணாய்,,,
அங்க ணுடைய னவன்” (கலி.37) என்பதனுள் “மெய்யறியா தேன்போற் கிடந்தேன்” என்புழி முன்னர் மெய்யறி வழிநிலை பிழையாமனின்று பின்னர்ப் பொய்யாக வழிநிலை பிழைத்துக் கூறியது வழுவேனும் இவளுந் தலைவனும் இவ்வாறே செறிந்தமை யுணர்த்தலின் மறைபுலப்படுத்துங் கருத்தினளாந் தலைவி யென்பது பயனாம். “மள்ளர்
குழீஇய விழவி னானும்” (குறுந்.31) “அருங்கடியன்னை” (நற்.365)
“பாம்பு மதனழியும் பானாள் கங்குலும், அரிய வல்லமன் இகுளை” (அகம்.8) என்பனவற்றுள் தலைவி தேடிச் சென்றதுஞ் செல்வாமென்றதுஞ் சிறைப்புறமாக வரைவுகடாயது. பொருட்பயன் றருதலின் அறக்கழிவுடைய வேனும் அமைந்தன. இது,
‘பல்வேறு கவர்பொரு ணாட்டத்தான்’
(தொல்.பொ.114) அறக்கழிவுடையனவுங் கூறப்பெறுமென்றமைப்பது
பெரும்பான்மை. இஃது அதிகாரத்தாற் றோழிக்குந் தலைவிக்குங் கொள்க.
(24) மேலதற்கொரு புறனடை
|