நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3676
Zoom In NormalZoom Out


முயங்கினான்;   யான்   அதற்கு  முன்  ஞெகிழ்ந்தே  மனநெகிழ்ச்சி
அவனறியாமன்  மறைத்து  வன்சொற்சொல்லி  நீங்கினேன், அவ்வழி
என்  வன்கண்மையாற் பிறிதொன்று கூறவல்லனாயிற்றிலன், அவ்வாறு
போனவன்  இன்று  நமக்குத்  தோலாத்  தன்மையின்மை யினின்றும்
இளிவந்தொழுகுவன்,  தனக்கே  நந்தோள் உரியவாகலும் அறியானாய்
என்னைப்  பிறநிலை  முயலுங்  கண்ணோட்டமு  முடையவனை நின்
ஆயமும்  யானும்  நீயுங் கண்டு நகுவோமாக, நீ அவன் வருமிடத்தே
செல்வாயாக,  எனக்  கூறியவழி: எம் பெருமானை இவள் புறத்தாற்றிற்
கொண்டாள்    கொல்லோவெனவும்,    அவன்    தனக்கு   இனிய
செய்தனவெல்லாம்      என்      பொருட்டென்று     கொள்ளாது
பிறழக்கொண்டாள்   கொல்லோவெனவுந்   தலைவி  கருதுமாற்றானே
கூறினாளெனினும்    அதனுள்ளே   இவளெனக்குச்   சிறந்தாளென்ப
துணர்தலின்  என்  வருத்தந்  தீர்க்கின்றில்லை  யென்றான்  எனவும்,
அதற்கு    முகமனாக    இவளைத்   தழீஇக்கொண்டதன்றி   இவள்
பிறழக்கொண்ட    தன்மை    அவன்    கணுளதாயின்   இவளைக்
குறிப்பறியாது   புல்லானெனவும்,   இவ்வொழுகலாறு  சிறிதுணர்தலில்
இக்குறைமுடித்தற்கு  மனஞெகிழ்ந்தாளெனவும்,  அவனை  என்னோடு
கூட்டுதற்கு  என்னை  வேறுநிறுத்தித்  தானும்  ஆயமும் வேறுநின்று
நகுவே   மெனக்  கூறினாளெனவுந்,  தலைவி  நாண்  நீங்காமைக்குக்
காரணமாகிய  பொருளை உள்ளடக்கிப் புணர்த்துக் கூறியவாறு காண்க.
இதனுள்   அறக்கழிவான   பொருள்  புலப்படவும்,  ஏனைப்பொருள்
புலப்படாமலுங்       கூறாக்கால்      தலைவியது       மறையை
வெளிப்படுத்தினாளாமாதலின்   அதனை   ‘மிக்கபொரு’   ளென்றார்.
ஏனையவற்றிற்கும்    உட்பொருள்    புணர்த்தவாறுணர்ந்து   பொரு
ளுரைத்துக் கொள்க.                                      (25)

எல்லா என்னுஞ்சொல் இருபாற்குமுரித்தெனல்
 

220. முறைப்பெயர் மருங்கிற் கெழுதகைப் பொதுச்சொல்
நிலைக்குரி மரபின் இருவீற்றும் உரித்தே.
 

இது, கிழவன் கிழத்தி பாங்கன்  பாங்கியென்னு முறைப் பெயராகிய
சொற்பற்றிப் பிறந்ததொரு வழுவமைக்கின்றது;

(இ-ள்.) முறைப்பெயர் மருங்கிற்  கெழுதகைப்  பொதுச்  சொல் -
முறைப்பெயரிடத்து இருபாற்கும் பொருந்தின தகுதியை