நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3677
Zoom In NormalZoom Out


யுடைய  எல்லா  வென்னுஞ் சொல்; நிலைக்கு உரிமரபின் இருவீற்றும்
உரித்தே  -  புலனெறிவழக்கிற்குரிய  முறைமையினானே  வழுவாகாது
ஆண்பாற்கும் பெண்பாற்கும் ஒப்ப உரியதாய் வழங்கும் எ-று.

‘கெழுதகை’  யென்றதனானே  தலைவியுந் தோழியுந் தலைவனைக்
கூறியதே    பெரும்பான்மையென்றுந்    தலைவன்   தலைவியையும்
பாங்கனையுங் கூறுதல் சிறுபான்மை வழுவமைதியென்றுங் கொள்க.

உ-ம்:

“அதிர்வில் படிறெருக்கி வந்தென் மகன்மேல்
முதிர்பூண் முலைபொருத ஏதிலாள் முச்சி
உதிர்துகள் உக்கநின் ஆடை யொலிப்ப
எதிர்வளி நின்றாய்நீ செல்;
இனி யெல்லா”                           
(கலி.81)

எனத்    தலைவியைத்    தலைவன்    விளித்துக்கூறலின்   வழுவா
யமைந்தது.

“எல்லாநீ,
முன்னத்தான் ஒன்று குறித்தாய்போற் காட்டினை
நின்னின் விடாஅ நிழல்போல் திரிதருவாய்
என்நீ பெறாத தீதென்.”                   
(கலி.61)

எனத் தோழி தலைவனை விளித்துக்கூறலின் வழுவாயமைந்தது.

“எல்லா விஃதொத்தன்”(கலி.61) என்பது பெண்பால் மேல் வந்தது.
ஏனைய வந்துழிக் காண்க. பொதுச்சொல் லென்றதனானே எல்லா எலா
எல்ல எலுவ எனவுங் கொள்க.

“எலுவ சிறாஅர்”   (குறுந்.129)  என  வந்தது. “யாரை யெலுவ
யாமே”
(நற்.395) எனத் தலைவனைத் தோழி கூறினாள்.

எலுவியென்பது பாலுணர்த்தலின் ஆராயப்படாது.           (26)

தோழி தலைவியுறுப்பைத் தன்னுறுப்பாகவுங் கூறுவனெனல்
 

221. தாயத்தின் அடையா ஈயச் செல்லா
வினைவயின் தங்கா வீற்றுக் கொளப்படா
எம்மென வரூஉங் கிழமைத் தோற்றம்
அல்லா வாயினும் புல்லுவ உளவே.
 

இது, தோழி தலைவியுறுப்பினைத் தன்னுறுப்பாகக் கூறப் பெறுமென
வழுவமைக்கின்றது.

(இ-ள்.)  தாயத்தின்  அடையா  -  தந்தையுடைய பொருள்களாய்
மக்களெய்துதற்குரிய  பொருள்களிற் சேராதனவுமாய்; ஈயச் செல்லா -
அறமும்   புகழுங்  கருதிக்கொடுப்பப்  பிறர்பாற்  செல்லாதனவுமாய்;
வினைவயின் தங்கா - மைந்தரில்லாதார்க்கு மைந்தர் செய்வன செய்து
பெறும்  பொருளில்  தங்காதனவுமாய்;  வீற்றுக்  கொளப்படா - வேறு
பட்டானொருவன் வலிந்து கொள்ளப்படாதனவுமாய்; எம்மென வரூஉங்
கிழமைத்  தோற்றம்  -  எம்முடையனவென்று தோழி கூறப் புலனெறி
வழக்கிற்குப்   பொருந்திவரும்   உரிமையை   யுடைய  உறுப்புக்கள்;
அல்லாவாயினும் புல்லுவ உளவே -