வழுவாயினும் பொருந்து வனவுள எ-று. உறுப்புக்
கட்புலனாதலின் தோற்றமென்றார். எனவே, உறுப்பொழிய இந்நான்கும் எம்மெனக் கூறலாகாவென்றார். “ஒருநாளென், தோள்நெகிழ் புற்ற துயரால் துணிதந்து”
(கலி.37) எனவும், “என்தோள் எழுதிய தொய்யிலும்”
(கலி.18) எனவும் தலைவி தோளினை என்தோள் என்றாள். “தன்கால் அரியமை சிலம்பு கழீஇப் பன்மாண் வரிப்புனை பந்தொடு வைகிய செல்வோள் இவைகாண் தோறும் நோவாம் மாதோ.”
(நற்.12) “நெய்தல் இதழுண்கண், நின்கண்ணா கென்கண் மன்”
(கலி.39) என்பனவும் இதன்கணடங்கும். ‘உள’ வென்றதனாற் சிறுபான்மை தலைவி கூறுவனவுங்கொள்க. அவை, “என்னொடும் நின்னொடுஞ் சூழாது”
(அகம்.128) எனவும், “நின்கண்ணாற் காண்பென்மன் யான்”
(கலி.39) எனவும் வரும்.
(27) பால்வழுவமைத்தல்
|