நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3741
Zoom In NormalZoom Out


நீயே’’                              (சிற்றெட்டகம்)  

இது   வற்புறுத்தாற்றியது.   இஃது   உரிப்பொருளொன்றுமே   வந்த
பாலை.
 

‘‘பூங்கொடி மருங்கி னெங்கை கேண்மை
முன்னும் பின்னு மாகி
யின்னும் பாண னெம்வயி னானே.’’
 

இது   வாயின்   மறுத்தது.  இஃது   உரிப்பொருளொன்றுமே  வந்த
மருதம்.
 

‘‘அங்கண் மதிய மரவின்வாய்ப் பட்டெனப்
பூசூல் வாயாப் புலம்புமனைக் கலங்கி
யேதின் மாக்களு நோவர் தோழி
யொன்று நோவா ரில்லைத்
தெண்கடற் சேர்ப்ப னுண்டவென் னலக்கே.’’
 

இது    கழிபடர்   கிளவி.   இது   பேரானும்   உரிப்பொருளானும்
நெய்தலாயிற்று.
 

இங்ஙனம் கூறவே, உரிப்பொருளின்றேற் பொருட்பயனின்றென்பது
பெற்றாம்.  இதனானே  முதல் கரு வுரிப்பொருள் கொண்டே வருவது
திணையாயிற்று. இவை பாடலுட் பயின்ற வழக்கே இலக்கண மாதலின்
இயற்கையாம்.  அல்லாத  சிறுபான்மை  வழக்கினைச் செயற்கையென
மேற்பகுப்பர்.
 

முதல் இன்னது எண்பதும் அதன் பகுப்பும்
  

4.

முதலெனப் படுவத நிலம்பொழு திரண்டன்
இயல்பென மொழிப இயல்புணர்ந் தோரே.

 

இது  நிறுத்தமுறையானே முதல் உணர்த்துவான் அதன்  பகுதியும்
அவற்றுட் சிறப்புடையனவும் கூறுகின்றது.
 

(இ-ள்)  முதல் எனப்படுவது - முதலெனச் சிறப்பித்துக் கூறப்படுவது;
நிலம் பொழுது இரண்டன் இயல்பு என மொழிப - நிலனும் பொழுதும்
என்னும்  இரண்டனது இயற்கை நிலனும் இயற்கைப் பொழுதும் என்று
கூறுப:  இயல்புணர்ந்தோரே  - இடமும் காலமும் இயல்பாக உணர்ந்த
ஆசிரியர் எ-று.
 

‘இயற்கை’ யெனவே, செயற்கை  நிலனுங்  செயற்கைப்  பொழுதும்
உளவாயின. மேற் ‘பாத்திய’ (2) நான்கு நிலனும் இயற்கை நிலனாம்.
 

ஐந்திணைக்கு வகுத்த பொழுதெல்லாம்  இயற்கையாம்;  செயற்கை
நிலனும் பொழுதும் முன்னர் அறியப்படும்.
 

‘முதல் இயற்கைய’ வென்றதனாற் கருப்பொருளும் உரிப்பொருளும்
இயற்கையுஞ்     செயற்கையுமாகிய     சிறப்புஞ்    சிறப்பின்மையும்
உடையவாய்ச்  சிறுவரவின  வென  மயக்கவகையாற் கூறுமாறு மேலே
கொள்க.  இனி நிலத்தொடு காலத்தினையும் ‘முதல்’ என்றலின், காலம்
பெற்று  நிலம்  பெறாத பாலைக்கும் அக்காலமே முதலாக அக்காலத்து
நிகழும் கருப்பொருளும் கொள்க. அது முன்னர்க் காட்டிய உதார