இஃது
எய்தியதன்மேற் சிறப்புவிதி; முற்கூறிய குறிஞ்சிக்கு முன்பனியும் உரித்தென்றலின். (இ-ள்)
பனி எதிர் பருவமும் உரித்து என மொழிப - பனி முற்பட்ட பருவமுங் குறிஞ்சிக்கு உரித்தென்று கூறுவர் ஆசிரியர் எ-று. எதிர்தலென்பது முன்னாதல்; எனவே,
முன்பனியாயிற்று, அது ஞாயிறுபட்ட அந்திக்கண் வருதலின்.
உரித்தென்றதனாற் கூதிர் பெற்ற யாமமும் முன்பனி பெற்று வரும் எனக் கொள்க. உ-ம்: பனியடூஉ நின்ற பானாட் கங்குல் தமியோர் மதுகை தூக்காய் தண்ணென
முனிய அலைத்தி முரணில் காலை
(அகம்.125) என முன்பனியாமங் குறிஞ்சிக்கண் வந்தது.
மருதத்திற்குரிய சிறுபொழுதும் நெய்தற்குரிய சிறுபொழுதும்
|