னெறிவழக்கஞ் செய்யப்படும். எற்பாட்டுக்கு முன்னர்த்தாகிய
நண்பகலைப் பலைக்குக் கூற வேண்டிப்
பின் வைத்தாரேனும் பெரும்பொழுதிற்கு முற்கூறுதலின் ஒருவாற்றாற்
சிறுபொழுதாறும் முறையே வைத்தாராயிற்று. காலையும்
மாலையும் நண்பகலன்ன கடுமைகூரச் சோலை தேம்பிக் கூவன் மாறி, நீரும் நிழலும் இன்றி, நிலம் பயந்
துறந்து, புள்ளும் மாவும் புலம்புற்று இன்பமின்றித்
துன்பம் பெருகுவதொரு காலமாதலின், இன்பத்திற்கு இடையூறாகிய
பிரிவிற்கு நண்பகலும் வேனிலுஞ் சிறப்புடைய ஆயின. ‘‘தெள்ளறல் யாற்றுத் திரைமணல் அடைகரை வண்டு வரிபாடத் தண்போ தலர்ந்து தாதுந் தளிரு மேதகத் துவன்றிப் பல்பூஞ் சோலைப் பன்மலர் நாற்றமொடு செவ்விதிற் றென்றல் நொவ்விதிற் றாகிக் குயில் கூஉக் குரலும் பயில்வதன் மேலும் நிலவுஞ் சாந்தும் பயில்வுறு முத்தும் இன்பம் விளைக்கு நன்பொருள் பிறவும் பண்டைய போலாது, இன்பம் மிகத்தரும் இளவேனிற் காலத்துப்,
பொழில் விளையாடியும், புதுப்பூக் கொய்தும், அருவியாடியும் முன்னர்
விளையாட்டு நிகழ்ந்தமை பற்றிப் பிரிந்த கிழத்தி மெலிந்துரைக்குங் கிளவி
பயின்று வருதலானும், உடன்போக்கின்கண் அக்காலம் இன்பம் பயக்குமாதலானும் இளவேனிலொடு நண்பகல் சிறந்த தெனப்பட்டது. பிரிந்த கிழத்தி இருந்து கூறுவன கார்கால மன்மையின் முல்லையாகா. உ-ம்: ‘‘கள்ளியங் காட்ட புள்ளியம் பொறிக்கலை வறனுறல் அங்கோ டுதிர வலங்கடந்து புலவுப்புலி துறந்த கலவுக்கழி கடுமுடை இரவுக்குறும் பலற நூறி நிரைபகுத் திருங்கல் முடுக்கர்த் திற்றி கெண்டும் கொலைவில் ஆடவர் போலப் பலவுடன் பெருந்தலை யெருவையொடு பருந்துவந் திறுக்கும் அருஞ்சுரம் இறந்த கொடியோர்க் கல்கலும் இருங்கழை இறும்பின் ஆய்ந்துகொண் டறுத்த நுணங்குகண் சிறுகோல் வணங்கிறை மகளிரொ டகவுநர்ப் புரந்த வன்பின் கழல்தொடி
நறவுமகிழ் இருக்கை நன்னன் வேண்மான் வயலை வேலி வியலூர் அன்னநின் அலர்முலை யாகம் புலம்பப்
|