இஃது
‘ஒன்றாத் தமரினும்’
(தொல். பொ. அகத். 41) என்னுஞ் சூத்திரத்திற்கொரு புறனடை
கூறுகின்றது. (இ-ள்.)
நிகழ்ந்தது கூறி. ஒன்றாத்தமரினும் என்னுஞ்
சூத்திரத்துத் தலைவன்கண் நிகழ்ந்த
கூற்றினைத் தலைவியுந் தோழியுங்
கூறி, நிலையலுந் திணையே. அதன்கண்
நிலைபெற்று நிற்றலும் பாலைத் திணையாம்
எ-று. உ-ம்:
‘‘அரும்பொருள் வேட்கையி
னுள்ளந் துரப்பப்
பிரிந்துறை சூழாதி யைய விரும்பிநீ
பிரிந்துறை சூழாதி யைய விரும்பிநீ
யென்றோ ளெழுதிய தொய்யிலும் யாழநின்
மைந்துடை மார்பிற் சுணங்கு நினைத்துக்காண்
சென்றோர் முகப்பப் பொருளும் கிடவாது
ஒழிந்தவ ரெல்லாரு முண்ணாதுஞ் செல்லா
ரிளமையுங் காமமு மோராங்குப் பொற்றார்
வளமை விழைதக்க துண்டோ வுளநா
ளொரோஒகை தம்முட் டழீஇ யொரோஒகை
யொன்றன் கூறாடை யுடுப்பவரே ஆயினும்
மொன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை யரிதரோ
சென்ற விளமை தரற்கு.’’
(கலி.18) இதனுள் ‘உளநாள்’
என்றது, நளது சின்மை; ‘அரிதரோ சென்ற இளமை
தரற்கு’ என்றது இளமையதருமை; ‘உள்ளந்
துரப்ப’ என்றது உள்ளத்தான் உஞற்றுதலான்
தாளான் பக்கம்; ‘சென்றோர் முகப்பப் பொருளுங்
கிடவாது’ என்றது தகுதியது அமைதி, தத்தம் நிலைமைக் கேற்பப்
பொருள்செய்ய வேண்டுதலின் அது பாணிக்கு
மென்றலின்; ‘ஒரோஒகை தம்முட் டழீஇ
ஒரோஒகை, ஒன்றன்கூ றாடை உடுப்பவரே யாயினும்’
என்றது இன்மைய திளிவு; ‘வளமை விழைதக்க
துண்டோ’ என்றது உடைமைய துயர்ச்சி;
பிரிந்துறை சூழாதி ஐய’ என்றது அன்பினதகலம்,
‘பிரிந்துறைந்
தன்புபெருக்கல்
வேண்டாதம்முளொன்றினார்
வாழ்கையே வாழ்க்கை’ என்றலின்; ‘தொய்யிலுஞ் சுணங்கும்
நினைத்துக்காண்’ என்றது அகற்சிய தருமை.
இவ்
வெட்டுந் தாமே கூறல் வேண்டினமையின்
முன்னொருகால் தலைவன்
கூறக்கேட்டுத் தோழியுந்
தலைவியும் உணர்ந்தமை கூறியவாறு
காண்க. ‘‘பொய்யற்ற கேள்வியாற்
புரையோரைப் படர்ந்துநீ
மையற்ற படிவத்தான் மறுத்தர லொல்வதோ’’ (கலி.15) என்பது ஓதற்குப்
பிரிவலெனத் தலைவன் கூறியது கேட்ட
தோழி கூறியது. ‘‘நோற்றோர்
மன்ற தாமே கூற்றம்
கோளுற விளியார்பிறர்
|