நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3827
Zoom In NormalZoom Out


கொளவிளிந் தோரெனத்
தாள்வலம் படுப்பச் சேட்புலம் படர்ந்தோர்
நாளிழை நெடுஞ்சுவர் நோக்கி நோயுழந்து
ஆழல் வாழி தோழி தாழாஅது
உருமெனச் சிலைக்கும் ஊக்கமொடு பைங்கால்
வரிமரல் நோன்ஞாண் வார்சிலைக் கொளீஇ
அருநிறத் தழுத்திய அம்பினர் பலருடன்
அண்ணல் யானை வெண்கோடு கொண்டு
நறவுநொடை நெல்லின் நாண்மகிழ் அயருங்
கழல்புனை திருந்தடிக் கள்வர் கோமான்
மழபுலம் வணக்கிய மாவண் புல்லி
விழிவுடை விழுச்சீர் வேங்கடம் பெறினும்
பழகுவ ராதலோ வரிதே முனாஅது
முழவுறழ் திணிதோ ணெடுவே ளாவி
பொன்னுடை நெடுநகர்ப் பொதினி அன்னநின்
ஒண்கேழ் வனமுலைப் பொலிந்த
நுண்பூண் ஆகம் பொருந்துதன் மறந்தே’’
     (அகம்.61)

இவ் வகப்பாட்டின் மூப்பினும் பிணியினும் இறவாது அமர்க்களத்து
வீழந்தோரே  துறக்கம்  பெறுவரெனத்  தன்சாதிக்கேற்பத்  தலைவன்
புகழும் மானமும் எடுத்து வற்புறுத்தலைத் தோழி கூறினாள்.

‘‘வேந்தன் குறைமொழிந்து வேண்டத் தலைப்பிரிந்தார்
தாந்தங் குறிப்பின ரல்லரா - லேந்திழாய்
கண்பனி வாரக் கலங்கல் பிரிவரோ
தண்பனி நாளே தனித்து.’’

இது  குறைமொழிந்து வேண்டினமை தலைவன் கூறக்கேட்ட தோழி
கூறியது. ‘‘அரிதாய வறனெய்தி’’ (பாலைக்கலி.11) என்றது மூன்றன்பகுதி
(41) தலைவன் கூறக்கேட்ட தலைவி கூறியது.

‘‘யானெவன் செய்கோ தோழி பொறிவரி
வானம் வாழ்த்திப் பாடவும் அருளாது
உறைதுறந் தெழிலி நீங்கலிற் பறையுடன்
மரம்புல் லென்ற முரம்புயர் நனந்தலை
அரம்போழ் நுதிய வாளி அம்பின்
நிரம்பா நோக்கின் நிரையங் கொண்மார்
நெல்லி நீளிடை எல்லி மண்டி
நல்லமர்க் கடந்த நாணுடை மறவர்
பெயரும் பீடு மெழுதி அதர்தொறும்
பீலி சூட்டிய பிறங்குநிலை நடுகல்
வேலூன்று பலகை வேற்றுமுனை கடுக்கும்
மொழிபெயர் தேஎந் தருமார் மள்ளர்
கழிப்பிணிக் கறைத்தோல் நிரைகண் டன்ன
வுவலிடு பதுக்கை யாளுகு பறந்தலை
உருவில் பேஎய் ஊராத் தேரொடு
நிலம்படு மின்மினி போலப் பலவுடன்
இலங்குபரல் இமைக்கும் என்பநந்
நலந்துறந் துறைநர் சென்ற ஆறே.’’         
(அகம்.67)

இது மண்டிலத்தருமை தலைவன் கூறக் கேட்ட தோழி கூறி