நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3834
Zoom In NormalZoom Out


கொய்வார்க்கு     எளிதாகி   நின்று  பூக்கும்   நாடனென்றதனானே
தலைவன்  நுகருங்காரணத்தானன்றி  வந்து  எதிர்ப்பட்டுப்  புணர்ந்து
நீங்குவான்    நம்மை    இறந்துபாடு   செய்வியாது   ஆற்றுவித்துப்
போயினானெனவும், அதனானே நாமும் உயிர்தாங்கியிருந்து பலரானும்
அலைப்புண்ணா   நின்றனம்   வேங்கை   மரம்   போல   எனவும்,
உள்ளத்தான் உவமங்கொள்ள வைத்தவாறு காண்க.
  

ஒழிந்தனவும் வந்துழிக் காண்க.
  

இனி    அஃது    உள்ளத்தான்    உய்த்துணரவேண்டுமென   மேற்
கூறுகின்றார். (47)
  

உள்ளுறை யுவமமாவது இதுவெனல்

48.

உள்ளுறுத் திதனோ டொத்துப்பொருண் முடிகென
உள்ளுறுத் திறுவதை யுள்ளுறை யுவமம்.

  

இதுவும்   அங்ஙனம்   பிறந்த  உள்ளுறையுவமத்தினைப்  பொருட்கு
உபகாரம்பட உவமங்கொள்ளுமாறு கூறுகின்றது.
  

(இ-ள்.) இதனோடு ஒத்துப் பொருள் முடிகென உள்ளுறுத்து -யான்
புலப்படக்    கூறுகின்ற    இவ்வுவமத்தோடே   புலப்படக்   கூறாத
உவமிக்கப்படும்  பொருள்  ஒத்து  முடிவதாகவென்று  புலவன்   தன்
உள்ளத்தே கருதி; உள்ளுறுத்து இறுவதை  உள்ளுறை உவமம் - தான்
அங்ஙனங்  கருதும்   மாத்திரையே  யன்றியுங்  கேட்டோர் மனத்தின்
கண்ணும்   அவ்வாறே  நிகழ்த்துவித்து  அங்ஙனம்  உணர்த்துவதற்கு
உறுப்பாகிய    சொல்லெல்லாம்   நிறையக்    கொண்டு    முடிவது
உள்ளுறையுவமம் எ-று.
  

இதனானே  புலவன் தான் கருதியது கூறாதவழியுங் கேட்டோர்க்கு
இவன்  கருதிய  பொருள்  ஈதென்றாராய்ந்து கோடற்குக் கருவியாகிய
சிலசொற் கிடப்பச் செய்தல் வேண்டுமென்பது கருத்தாயிற்று.

அது,  

‘‘வீங்குநீ ரவிழ்நீலம் பகர்பவர் வயற்கொண்ட
ஞாங்கர் மலர்சூழ்தந் தூர்புகுந்த வரிவண்
டோங்குய ரெழில் யானைக் கனைகடாங் கமழ்நாற்ற
மாங்கவை விருந்தாற்றப் பகலல்கிக் கங்குலான்
வீங்கிறை வடுக்கொள்ள வீழுநர்ப் புணர்ந்தவர்
தேங்கமழ் கதுப்பினு ளரும்பவிழ் நறுமுல்லை
பாய்ந்தூதிப் படர்தீர்ந்து பண்டுதா மரீஇய

பூம்பொய்கை மறந்துள்ளாப் புனலணி நல்லூர!’’  (கலி.66)

இதனுள்,  வீங்குநீர் பரத்தையர் சேரியாகவும், அதன்கண் அவிழ்ந்த
நீலப்பூக்    காமச்செவ்வி   நிகழும்   பரத்தையராகவும்,   பகர்பவர்
பரத்தையரைத்    தேரேற்றிக்கொண்டு   வரும்   பாணன்   முதலிய
வாயில்களாகவும்,   அம்மலரைச்   சூழ்ந்த  வண்டு  தலைவனாகவும்,
யானையின்  கடாத்தை  ஆண்டுறைந்த  வண்டுகள்  வந்த வண்டுக்கு
விருந்தாற்றுதல் பகற்பொழுது புணர்கின்ற சேரிப்பரத்தை