அ
துடீஇக்
குவளை யுண்கண் குய்ப்புகை கழுமத்
தான்றுழந் தட்ட தீம்புளிப் பாக
ரினிதெனக் கணவ னுண்டலி
ணுண்ணிதின் மகிழ்ந்தன் றொண்ணுதன் முகனே’’
(குறுந்.167) இஃது
உலகியலே வந்தது. இனி
அவ்வந் நிலத்து மக்களே
தலைவராயக்கால் அவை உலகியலேயாம். இனிக்
கைக்கிளையுள் ஆசுரமாகிய
ஏறுகோடற் கைக்கிளை, காமப்பொருளாகிய
புலனெறிவழக்கில் வருங்கால், முல்லை நிலத்து ஆயரும்
ஆய்ச்சியருங் கந்தருவமாகிய
களவொழுக்கம் ஒழுகி வரையுங்காலத்து,
அந்நிலத்தியல்பு பற்றி
ஏறுதழுவி வரைந்து கொள்வரெனப் புலனெறி
வழக்காகச் செய்தல் இக்கலிக்குரித்தென்று கோடலும் ‘பாடலுள்
அமையாதன’ என்றதனாற் கொள்க. அது ‘‘மலிதிரையூர்ந்து’’
என்னும் முல்லைக்கலியுள் (4) ‘‘ஆங்க
ணயர்வர் தழூஉ’’ என்னுந்
துணையும் ஏறு தழுவியவாற்றைத்
தோழி தலைவிக்குக் காட்டிக்
கூறிப், ‘‘பாடுகம் வம்மின்’’
என்பதனாற் றலைவனைப்
பாடுகம்
வாவென்றாட்கு, அவளும் ‘‘நெற்றிச்சிவலை...மகள்’’ ‘‘ஒருக்கு
நாமாடு...மகன்’’ என்பனவற்றான் அலரச்சம்
நீங்கினவாறும், அவற்றான்
வருந்தியவாறுங் கூறிப் பாடியபின்னர்த்,
தோழி, ‘‘கோளரி
தாக நிறுத்த கொலையேற்றுக்
காரி கதனஞ்சான் பாய்ந்த பொதுவற்கே
யார்வுற் றெமர்கொடை நேர்ந்தா ரலரெடுத்த
வூராரை யுச்சி மிதித்து’’
(கலி.104) என எமர்கொடை
நேர்ந்தாரெனக் கூறியவாறுங் காண்க. இவ்வாறே
இம்முல்லை நிலத்து அகப்பொருளொடு கலந்து வருங் கைக்கிளை பிறவுமுள;
அவையெல்லாம் இதனான் அமைத்துக் கொள்க.
புனைந்துரைவகையாற் கூறுப வென்றலிற் புலவர் இல்லனவுங் கூறுபவாலோவெனின்,
உலகத்தோர்க்கு நன்மை பயத்தற்கு நல்லோர்க் குள்ளனவற்றை
ஒழிந்தோர் அறிந்தொழுகுதல்
அறமெனக்கருதி, அந்நல்லோர்க்குள்ளனவற்றிற் சிறிது
இல்லன |