நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3844
Zoom In NormalZoom Out


னவரும்.    ‘மக்கள் நுதலிய’ என்பதனானே மக்களல்லாத தேவரும்
நரகருந்   தலைவராகக்   கூறப்படாரெனவும்,   ‘அகனைந்திணையும்’
என்றதனானே   கைக்கிளையும்   பெருந்திணையுஞ்   சுட்டி  ஒருவர்
பெயர்கொண்டுங்     கொள்ளாதும்     வருமெனவுங்     கொள்க.
அகனைந்திணையெனவே  அகமென்பது நடுவுநின்ற ஐந்திணையாதலிற்
கைக்கிளையும்    பெருந்திணையும்    அவற்றின்    புறத்துநிற்றலின்
அகப்புறமென்னும் பெயர் பெறுதலும் பெற்றாம்.
  

இனி    அவை வரையறையுடைமை மேலைச் சூத்திரத்தான் அறிக.
‘‘கன்று   முண்ணாது   கலத்தினும்   படாது   -   நல்லான்  றீம்பா
னிலத்துக்...கவினே.’’   இது   (குறுந்.27)  வெள்ளி  வீதியார்  பாட்டு.
‘‘மள்ளர்  குழீஇய  விழவினானும்...மகனே’’  (குறுந்.31)  இது  காதலற்
கெடுத்த  ஆதிமந்திபாட்டு.  இவை  தத்தம் பெயர் கூறிற் புறமாமென்
றஞ்சி  வாளாது  கூறினார்.  ஆதிமந்திதன்  பெயரானுங், காதலனாகிய
ஆட்டனத்தி பெயரானுங் கூறிற் காஞ்சிப்பாற்படும்.
  

‘‘ஆதி மந்தி போல
ஏதஞ் சொல்லிப் பேதுபெரி துறலே’’ (அகம்.236)
  

எனவும்,  

‘‘வெள்ளி வீதியைப்போல நன்றுஞ்
செலவயர்ந் திசினால் யானே’’ (அகம்.147)
  

எனவும்,   அகத்திணைக்கட்   சார்த்துவகையான்  வந்தன  அன்றித்
தலைமைவகையாக வந்தில என்பது.
  

வருகின்ற    (55) சூத்திரத்துப் ‘பொருந்தின்’ என்னும் இலேசானே
இச் சார்த்துவகை கோடும். இது பெயரெனப் பட்ட கருப்பொருளாதலிற்
கூற்றிற்கு   உரிய  தோழியும்  பாங்கனும்  முதலிய  வாயிலோரையும்
பொதுப்பெயரா னன்றி இயற்பெயர்த் தொடக்கத்தன கூறப்பெறாரென்று
கொள்க.
  

உ-ம்:  

‘‘முகிழ்முகிழ்த் தேவர வாயினு முலையே
யரவெயிற் றொடுக்கமொ டஞ்சுதக் கனவே
களவறி வாரா வாயினுங் கண்ணே
நுழைநுதி வேலி னோக்கரி யவ்வே
யிளைய ளாயினு மணங்குதக் கிவளே
முளையிள நெருப்பின் முதுக்குறைந் தனளே
யதனா னோயில ளாகுக தில்ல
சாயிறைப் பணைத்தோ ளீன்ற தாயே’’
  

இது சுட்டி ஒருவர் பெயர் கொள்ளாக் கைக்கிளை.  

‘‘ஆள்வினை முடித்த வருந்தவ முனிவன்
வேள்வி போற்றிய விராம னவனொடு
மிதிலை மூதூ ரெய்திய ஞான்றை
மதியுடம் பட்ட மடக்கட் சீதை
கடுவிசை வின்ஞா ணிடியொலி கேளாக்
கேட்ட பாம்பின் வாட்ட மெய்தித்
துயிலெழுந்து மயங்கி